For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் யாரோட பொண்ணு தெரியுமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரிடமே வம்பு பண்ணிய வாரிசு நடிகை!

  By Staff
  |

  சென்னை: அப்பா நடிகரே அனைவரையும் அரவணைத்து இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குள் அவரின் வாரிசு நடிகையின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம்.

  வாய்க் கொழுப்பு காரணமாக ஏற்கனவே பெரிதாக வாய்ப்புகள் வந்து குவியாத நிலையில், இப்போ இயக்குநர்களிடமே வம்பு பண்ண ஆரம்பித்து இருக்கிறாராம் அந்த வாரிசு நடிகை.

  பிக் பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்

  இப்படியே போனால், இனி அவரை யாருமே சீண்டக் கூட மாட்டார்கள் என்கிற பேச்சு கோடம்பாகத்தில் எல்லா பக்கமும் எதிரொலித்து வருகிறதாம்.

  இரண்டாவது மகள்

  இரண்டாவது மகள்

  பிரபல நடிகரின் இரு மகள்களும் திரைத் துறையில் நடிகைகளாக மாறி நடித்து வருகின்றனர். இதில், மூத்த மகள் ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், இரண்டாவது மகளுக்கு சிபாரிசு பேரிலேயே வாய்ப்புகள் எப்போதாவது வரும் நிலை உள்ளது.

  ரொம்ப கம்மி

  ரொம்ப கம்மி

  அக்கா நடிகைக்கு முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயின் வாய்ப்புகள் வரிசையாக குவிந்து வரும் நிலையில், தங்கைக்கு அவ்வளவாக வாய்ப்பே இல்லையாம். ஆனாலும், அவருக்கு இருக்கும் கெத்து கொஞ்சமும் குறையாமல் எல்லா இடங்களிலும் அதிகாரமாக பேசி வருவது பலருக்கும் எரிச்சலை கொடுத்துள்ளது.

  எல்லாமே ஃபிளாப்

  எல்லாமே ஃபிளாப்

  அதுமட்டுமின்றி அந்த வாரிசு நடிகை நடித்த எந்த படமும் இதுவரை ஓடவில்லை என்பது தான் நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என்கிற உண்மை. ஒல்லி நடிகர், டாப் நடிகர், கெட்டப் நடிகர் என பல பிரபலங்களுடன் அவர் நடித்த அனைத்துமே அட்டு ஃபிளாப் ஆகி விட்டன.

  லக் இல்லை

  லக் இல்லை

  சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கொஞ்சம் கூட அந்த வாரிசு நடிகை நடித்தால் படமே ஓடாது அந்த அளவுக்கு அவர் ராசியில்லாத நடிகை என்றே முத்திரை குத்தி தங்கள் படங்களுக்கு புக் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

  பேபி நடிகை டார்ச்சர்

  பேபி நடிகை டார்ச்சர்

  இந்த படத்தில் கூட ஆரம்பத்தில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் இளம் நடிகை ஒருவரைத் தான் அந்த இளம் இயக்குநர் புக் செய்து இருந்தார். ஆனால், அந்த பேபி நடிகை கொடுத்த டார்ச்சர் காரணமாக அவரை ஓரங்கட்டிவிட்டு இவரை புக் செய்த நிலையில், தற்போது இவருடைய அதிக பிரசங்கித் தனம் இயக்குநரை கடுப்பாக்கி இருக்கிறதாம்.

  மேடம்னு சொல்லுங்க

  மேடம்னு சொல்லுங்க

  தன்னுடன் பணிபுரியும் அனைவரையும் பெயர் சொல்லி அழைப்பதையும், அவர்களும் தன்னை பெயர் சொல்லி அழைப்பதையே விரும்பி வரும் அந்த இளம் இயக்குநர், ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென அந்த வாரிசு நடிகையை பெயர் சொல்லி இங்க வாங்க என அழைக்க, உடனடியாக அவர் எப்படி என் பெயரை சொல்லி கூப்பிடலாம், மரியாதையா மேடம்னு சொல்லுங்க என்று முறைக்க பெரிய பஞ்சாயத்தே நடந்து விட்டதாம்.

  யாரோட பொண்ணு தெரியுமா

  யாரோட பொண்ணு தெரியுமா

  மேலும், நான் யாரோட பொண்ணு தெரியுமா? மத்தவங்கள ட்ரீட் பண்ற மாதிரி என்ன ட்ரீட் பண்ணா அவ்வளவுதான் நடப்பதே வேற என அனைவர் முன்னிலையிலும் அந்த இளம் இயக்குநரை அசிங்கப்படுத்த அவர் இவர் பக்கமே இனி தலை வைத்து படுக்கக் கூடாதுடா படம் முடியுற வரைக்கும் என உதவி இயக்குநர்களையே அனுப்பி வேலை வாங்கி வருகிறாராம்.

  English summary
  Popular actor daughter and Heir actress rude behavior upset young director on sets buzz circulates in cinema circle.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X