நாலாவது முறையும் நாமம் தானா?.. வாரிசுக்கு இப்பவே தலைவலி.. முன்னணி நடிகர்களே முடிச்சு விட்டா எப்படி?
சென்னை: தயாரிப்பு நிறுவனம் வாரிசு கைக்கு வந்ததில் இருந்தே அவர் ஹேப்பியாக இல்லை என்கின்றனர். அதற்கு காரணம் அவர் பணம் போட்டு வாங்கும் படமெல்லாம் தொடர்ந்து ஃப்ளாப் ஆகி வருவது தான் என்கின்றனர்.
எத்தனை கோடி வேஸ்ட் ஆனாலும் பரவாயில்லை, நம்மிடம் நிறைய காசு இருக்கு என அப்பா சாவி கொத்தை தூக்கிக் கொடுக்க மகன் ஒரு பைசா வேஸ்ட் பண்ணாம சாதிச்சு காட்டுறேன் சொல்லும் போதே அப்பா விழுந்து விழுந்து சிரித்து விட்டாராம்.

தொடர்ந்து 3 முறை நாமம் போடப்பட்ட நிலையில், அப்பாவின் முகத்தை பார்க்கவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கும் வாரிசு தற்போது நாலாவது முறையாக ஒல்லி நடிகரும் தனக்கு நாமத்தை போட்டு விடுவாரோ என்கிற அச்சம் வந்து தலைவலியில் புலம்பி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மூணு படமும் காலி: தயாரிப்பு மற்றும் விநியோகம் என பெரிய நாற்காலி கிடைத்த உடனே நல்ல நல்ல நடிகர்கள் படங்களாக வாங்கி வெளியிட்டால் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும் என நினைத்து முன்னணி நடிகர்களை நம்பி படங்களை வாங்கி வெளியிட்ட வாரிசுக்கு இதுவரை தொடர்ந்து ஹாட்ரிக் ஃப்ளாப் கிடைத்தது தான் மிச்சம் என்கின்றனர். இதில், முதல் போனியையே அந்த ஒல்லி நடிகர் தான் கடை வைத்து போட்டார் என்கின்றனர்.
பவரும் படுத்துடுச்சு: அதன் பினன்ர், தமாஸ் நடிகர் நடித்த பவர் படம் பக்காவாக தங்களுக்கு பெரிய படமாக அமையும் என நினைத்து அதிக பணத்தை வாரி கொடுத்திருக்கிறார். ஆனால், திரும்பி எதுவும் அவரது கைக்கு வராமல் மொத்தமும் போச்சு என்கிற நிலை தான் ஏற்பட்டுள்ளது என்கின்றனர். நல்ல டைரக்டர், நல்ல நடிகர்கள் பட்டாளம், பெரிய கதை என பார்த்து பார்த்து பணியாற்றினாலும் பலன் கிடைக்கவில்லையே என அப்செட் ஆகிவிட்டாராம்.
நாமம் போட்ட நம்பர் நடிகை: கடைசியாக 3வது பெரிய நாமத்தை அந்த நம்பர் நடிகை தான் போட்டு விட்டார் என்கின்றனர். கண்டிப்பாக அந்த ஹீரோ நடிச்சா படம் ஃப்ளாப்பே ஆகாது என ஏகப்பட்ட பில்டப்புகள் போடப்பட்ட நிலையில், அதையெல்லாம் வெள்ளந்தியாக நம்பி கடைசியில் ஹாட்ரிக் ஃப்ளாப்பை தான் பொறுப்பேற்ற பிறகு சந்தித்து ஹேப்பியே இல்லாமல் ஆகிவிட்டாராம் அந்த வாரிசு.
நாலாவது நாமம்?: மீண்டும் ஒல்லி நடிகர் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன், இன்னொரு ஹாட்ரிக் போடலாமா? தம்பி என தற்போது வந்திருப்பதாக பகீர் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இந்த முறையும் தயாரிப்பாளர் நைஸாக இந்த படத்தையும் வாரிசு தலையிலேயே கட்டிவிட்டார் என்கின்றனர். படம் முழுக்கவே சோகக் கதையாகவே செல்கிறது என்றும் 2ம் பாதி சொதப்பல் என வாரிசுக்கு வேண்டிய சினிமா ஞானிகள் பார்த்துவிட்டு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications