நடிகைக்கு டார்ச்சர்..பெண்களிடம் வீக்கான கணவர்..டென்ஷனான மனைவி..இயக்குநரின் டைவர்ஸுக்கு காரணம் இதுவா?
சென்னை: தமிழ்நாட்டுக்கு மழை சீசன் போல தமிழ் சினிமாவுக்கு இப்போது விவாகரத்து சீசன். பல பிரபலங்கள் தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் ஒரு இயக்குநரும் தனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அது ரசிகர்களிடம் மேற்கொண்டு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. இந்தச் சூழலில் அந்த விவாகரத்துக்கு இதுதான் காரணம் என்று ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமான அந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர். சில வருடங்கள் அவரிடம் பணியாற்றிவிட்டு முதல் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மேக்கிங்கில் தனித்து தெரிந்தார் இந்த இயக்குநர். அதனையடுத்து சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்துவந்த ஒருவரை ஹீரோவாக வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கினார் அவர். அந்தப் படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இயக்குநருக்கும், நடிகருக்கும் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

நல்ல இயக்குநர்: அந்தப் படத்துக்கு பிறகு இயக்குநரின் மீது வெளிச்சம் பாய்ந்தது. முக்கியமாக தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் எளிய மனிதர்களை பிரதானமாக்கி படைப்புக்களை கொடுத்ததால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அவர். மேலும் அவர் இயக்கிய ஒரு படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுமாதிரி ஒரு படமாவது எடுத்துவிட வேண்டும் என சினிமாவுக்கு ட்ரை செய்துகொண்டிருப்பவர்கள் பேசுவதுண்டு.
சர்ச்சைகள்: இது ஒருபக்கம் இருக்க இயக்குநர் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ந்தாரோ அதேபோல் அவரை சுற்றி சர்ச்சைகளும், பிரச்னைகளும் வளர்ந்தன. முக்கியமாக அவர் ஒரு படத்தை இயக்கினார். அதில் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியது. அந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தாலும்; இன்றுவரை படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. அதற்கு காரணம் ஃபைனான்ஸ் பிரச்னை என்று கூறப்பட்டது. அதேபோல் இந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநரின் வாழ்க்கையில் பெரும் புயல் அடித்தது.
நடிகைக்கு கொடுத்த டார்ச்சர்: அதாவது அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவருக்கு இயக்குநர் செமயாக டார்ச்சர் கொடுத்தாராம். அதுகுறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அட இந்த இயக்குநரா இப்படி என்றெல்லாம் பலரும் பேசிக்கொண்டார்கள். அதாவது அந்நடிகையை தனியாக ரூமுக்கு வரும்படி அழைத்ததாகவும்; ஆனால் நடிகை ஒத்துக்கொள்ளாததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அந்த நடிகையை அசிங்கமாக திட்டுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு காரணம்: அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிந்தது. அவரும் அதற்கு பிறகு ஒரு படத்தை இயக்கிவிட்டார். ஆனால் அந்த நடிகையோடு ஆரம்பித்த பிரச்னையை அத்தோடு நிறுத்தாமல்; இயக்குநர் இன்னும் சில பெண்களின் சவகாசத்தை பெற்றுக்கொண்டாராம். ஏற்கனவே நடிகையோடு இணைத்து பேசப்பட்டபோதே பெரும் சண்டையை போட்ட அவரது மனைவி; இப்போது கணவரின் செயல் மோசமானதை கண்டு மனம் வெதும்பி இருந்தாராம். ஒருகட்டத்தில் ஃபுல் போதையில் ஒருநாள் இன்னொரு பெண்ணுடன் இயக்குநர் இருந்ததை அவரது மனைவி தெரிந்துகொண்டாராம். பிறகு இனி இவருடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று விவாகரத்துக்கு முடிவு செய்துவிட்டாராம். இயக்குநரும் வேறு வழியில்லாமல் தானே முந்திக்கொண்டு வந்து அறிவிப்பை வெளியிட்டுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











