இது தெரியாம போயிடுச்சே.. அந்த உச்ச நடிகர் படம் குறித்து அடுக்கடுக்கா அப்டேட் வர இதுதான் காரணமாம்!

சென்னை: அந்த உச்ச நடிகரின் படத்தின் டைட்டில் அதுவா? இல்லை இதுவா? என்ற வதந்திகள் உலாவவும் அந்த உச்ச நடிகரின் படத்தை வேர்ல்ட் நடிகர் தயாரிக்கப் போவதாகவும் வதந்திகள் வர அந்த அரசியல் பிரச்சனை தான் காரணமாம்.

அந்த விஷயத்தில் இருந்து ரசிகர்களை திசை திருப்பவே இப்படி பல ரூமர்களை திட்டமிட்டே அந்த உச்ச நடிகர் தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் இறங்குகிறதாம்.

இங்க ஒரு குத்து

இங்க ஒரு குத்து

ரமணா பாணியில் தமிழில் தனக்கு பிடிக்காத அந்த வார்த்தையை கேட்க மாட்டேன் என அந்த உச்ச நடிகர் மறுத்துள்ள நிலையில், அவருக்கு எதிரான எதிர்ப்பு குரல்களும், ஆதரவு குரல்களும் அதிகரித்துள்ளன. இதுதான் சாக்கு என இன்னொரு அமைப்பு அவரது ரசிகர்கள் போர்வையில் இங்க ஒரு குத்து அங்க ஒரு குத்து என பிரச்சனையை மேலும் பெரிதாக்கி குளிர் காய்கிறது.

வாய் கொடுத்து

வாய் கொடுத்து

அந்த பிரச்சனையில் வீணாக வாய் கொடுத்து மாட்டிக்கிட்டார் அந்த உச்ச நடிகர் என சில ரசிகர்கள் நினைத்தாலும், எந்த ஒரு வார்த்தையையும் தங்கம் போல செலவு செய்யும் அந்த உச்ச நடிகர் தனது அரசியல் பயணத்துக்காக திட்டமிட்டே இந்த வார்த்தை பேசியுள்ளதாகவும், கோலிவுட் முதல் கோட்டை வரை பேசிக்கொள்கின்றனர்.

திசை திருப்ப

திசை திருப்ப

இந்நிலையில், மறக்க வேண்டிய விஷயம் இப்படியே போனால், விஷ்வரூபம் எடுத்து வேறொரு பிரச்சனையில் கொண்டு போய் முடியும் என்று சுதாரித்துக் கொண்ட அந்த உச்ச நடிகர் தரப்பு, இந்த விஷயத்தை திசை திருப்ப, தனது ரசிகர்களுக்கு புது புது அப்டேட்களை கொடுத்து குஷிப்படுத்தி அந்த பிரச்சனையில் இருந்து விலக்க முயற்சி செய்கிறதாம்.

பட தலைப்பு

பட தலைப்பு

இதனால், தான் ஃபேன் மேட் டிசைனே அதிகாரப்பூர்வ டிசைன் போன்று அட்டகாசமாக சமூக வலைதளங்களில் வைரலாக காரணமாம். மேலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்களையும் படத்தின் தலைப்புகளாக சித்தரித்து ஆன்லைனில் அலைய விட்டு வருகிறார்களாம். தொடர்ந்து வரும் அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களும் அந்த விஷயத்தை மறக்கத் தொடங்கி விட்டார்களாம்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

இந்த வரிசையிலேயே பெரிய உருட்டாக உச்ச நடிகரின் படத்தை அந்த வேர்ல்ட் நடிகர் தயாரிக்க உள்ளார் என பெரிய பிட் போட்டது தான். ஒரு விஷயத்தை மூடி மறைக்க அடுத்தடுத்து பல புதிய விஷயங்கள் வந்தால் தான் நம் மக்கள் பழைய விஷயங்களை மறப்பார்கள் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டுள்ள அந்த உச்ச நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதியாக மாறி வருகிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X