ரூட்டை மாற்றிய விஷ்ணு அவதார நடிகர்!
விஷ்ணு அவதாரத்தை பெயராகக் கொண்ட நடிகர் ரூட்டை மாற்றி வில்லனாகி இருக்கிறார்.
பெருமாளின் இன்னொரு பெயரைக் கொண்ட இயக்குநரின் தம்பி அவர். இவரது பெயரும் விஷ்ணுவின் குழந்தை அவதாரம்தான்.
இருவருக்குமே நேரம் சரியில்லை போல... அண்ணனுக்கும் படம் இல்லை. அவர் நம்பியிருக்கும் நடிகர் கல்ஷீட் தராமல் காத்திருக்க வைத்திருக்கிறார். தம்பி நடிக்கும் படங்களும் தோல்வியில் முடிகின்றன. வெறுத்துப்போன தம்பி இப்போது வில்லன் அவதாரம் எடுத்துவிட்டாராம்.
ஏற்கனவே ஒரு படத்தில் வில்லனாக நடித்தவர் இப்போது ஒல்லி நடிகரின் பார்ட் 2 படத்திலும் வில்லனாகி இருக்கிறார். தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஆர்வமாகி இருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications