Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோ நடிகருக்கு ஆதரவாக கோதாவில் குதித்த வில்லன் நடிகர்.. அதிகரிக்கும் ஆதரவால் அவரு செம ஹேப்பியாம்!
சென்னை: ஹீரோ நடிகருக்கு ஆதரவாக வில்லன் நடிகரும் கோதாவில் குதித்ததால் அந்த நடிகர் செம தெம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அந்த நடிகருக்கும் மேலிடத்துக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே டெர்ம்ஸ் சரியில்லாமல் உள்ளது. இதனால் வசனங்கள் மூலம் நடிகர் மேலிடத்தை குத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனால் கடுப்பாகும் மேலிடம் படத்திற்கு குடைச்சல் கொடுப்பதும் நடிகர் எதிராக போராட்டத்தில் குதிப்பது என்றும் விதண்டாவாதமாக நடந்து வருகிறது.
கெடுபிடி காட்டி
அண்மையில் நடைபெற்ற சோதனையில் கூட நடிகரை வேறு மாதிரி ட்ரீட் செய்தது மேலிடம். வீடுகளையும் விட்டு வைக்காமல் அப்படி இப்படி என கெடுபிடி காட்டி மிரள விட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் படப்பிடிப்பு இடத்திலும் சென்று தங்களின் பலத்தை காட்டினர் சிலர்.
மாஸ் காட்டிய ஹீரோ
இதனை பார்த்து ஒட்டு மொத்த சினிமாத்துறையும் முகம் சுளித்தது. என்கிட்டேயேவா.. இப்போ பாருங்க என் வெயிட்ட என்கிற ரீதியில் காண வந்த ரசிகர்களை வைத்து, மாஸ் காட்டி மிரட்டினார் நடிகர். அதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்கவே கொஞ்சம் ஆடித்தான் போனது மேலிடம்.
வில்லன் நடிகர் அதிரடி
இதனை தொடர்ந்து நடிகருக்கு எதிராக வேறொரு விஷயம் றெக்கை கட்டி பறந்தது. இதில் ஹீரோ நடிகரின் வில்லனின் பெயரும் அடிபட அடா போடா என பளிச்சென அதிரடி பதிலளித்தார் வில்லன் நடிகர். இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத சிலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நன்றி கூறிய நடிகர்
தொடர்ந்து வில்லன் நடிகருக்கும் ஹீரோ நடிகருக்கும் சினிமாத் துறையில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக வில்லன் நடிகருக்கு அக்கட தேசத்தில் கூட ஆதரவு பெருகி வருகிறது. இதனால் வில்லன் நடிகருக்கு நன்றி கூறியிருக்கிறாராம் ஹீரோ நடிகர்.
புதுத் தெம்பு
அதோடு ரசிகர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவும் அதிகரித்து வருவதால் செம ஹேப்பியாக உள்ளாராம் ஹீரோ நடிகர். ஏற்கனவே அரசியலில் ஈடுபாட்டுடன் உள்ளார் ஹீரோ நடிகர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அவருக்கு பெரும் தெம்பை கொடுத்திருக்கிறதாம்.