கல்யாணம் பண்ணிக்கோ… அட்வைஸ் செய்த தளபதி
சென்னை: மும்பையில் குடியேறி வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார் வடுமாங்காய் நடிகை. மீண்டும் வாழ்வு கொடுத்த தமிழில் கால் பதிக்கலாமா என்ற எண்ணத்தில் தளபதி நடிகரை தொடர்பு கொண்டுள்ளார்.
பழைய பாசத்தில் வாய்ப்பு கொடுப்பார் என்று எண்ணி செல்லில் தொடர்பு கொண்டவருக்கு பதில் ஏமாற்றம் தந்ததாம். வாய்ப்பு இல்லாவிட்டால் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடு என்பதுதான் தளபதி சொன்ன பதிலாம்.
எதற்கு இப்படி என்று விசாரித்தால் 'ஸ்லீப்பர் செல்' படத்திற்கு முதலில் அணுகியது வடுமாங்காய் நடிகையைத்தானாம். பாலிவுட்டில் பிஸி... 2 ஆண்டுகளுக்கு நோ கால்ஷீட் என திருப்பி அனுப்பிவிட்டு மும்பையில் பிசினாக ஒட்டிக்கொண்டாராம்.
அதற்கு பழிவாங்கத்தான் இப்படி வலிய வந்து வாய்ப்பு கேட்டும் வாசல் கதவை சாத்தினாராம் தளபதி. ஹிட் ஜோடி என்று பேசப்பட்ட இந்த ஜோடி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











