'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. பழி வாங்க நடிகர் எடுத்த அதிரடி முடிவு!

மாஜி காதலியின் பேட்டியால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சம்பந்தப்பட்ட நடிகர்.

சென்னை: மாஜி காதலி தன்னைப் பற்றி அளித்துள்ள பேட்டியால் கோபம் அடைந்துள்ள பாய்ஸ் நடிகர், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெண் தேடும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

காத்தாடி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை, ஆரம்பத்தில் பாய்ஸ் நடிகரைக் காதலித்தது ஊர் அறிந்த விசயம். கோயில் குளம் என இருவரும் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இருவருக்கும் இடையில் என்ன திடீர் மனக்கசப்பு ஏற்பட்டதோ, திடீரென காதலை முறித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெரிய வீட்டு மகனைக் காதலித்த நடிகை, தற்போது திருமதி ஆகிவிட்டார்.

 மனம் திறந்து பேட்டி:

மனம் திறந்து பேட்டி:

திருமணத்திற்குப் பிறகும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாகவே நடித்து வருகிறார் நடிகை. இந்நிலையில், சமீபத்தில் பாய்ஸ் நடிகருடன் தனக்கிருந்த காதல் பற்றியும், நடிகரைப் பற்றியும் மனம் திறந்து பேட்டியளித்திருந்தார்.

அதிரடி முடிவு:

அதிரடி முடிவு:

தற்போது அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் வகையில் படவாய்ப்புகள் இல்லாத நடிகர், தனது இமேஜை நடிகையின் பேட்டி கெடுத்து விட்டதாக கோபம் அடைந்துள்ளார். இதனால் தானும் விரைவில் நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு நடிகையின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளாராம்.

சவால்:

சவால்:

‘இந்த நடிகையைவிட நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவர் முன் சிறப்பாக வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்' என தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வரும் நடிகர், தனக்கு பெண் தேடும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

பாராட்டலாம் :

பாராட்டலாம் :

பழி வாங்குகிறேன் பேர்வழி என காதலித்த போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தாமல், தானும் திருமணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ வேண்டும் என நடிகர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது என்கிறார்கள் இருவருக்கும் வேண்டப்பட்டவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X