»   »  காதலிக்காக கடன் வாங்கும் ஹீரோ!

காதலிக்காக கடன் வாங்கும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடைத்தெரு நடிகையும் வெற்றி நடிகரும் ஒரு காலத்தில் ஒன்றாகவே திரிந்தவர்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என ஊரே நம்பிக்கொண்டிருந்த ஒரு பொழுதில் திடீரென நடிகை காணாமல் போனார். பின்னர் நடிகரும் சோக மூடுக்கு போய்விட்டார்.

திரும்ப வந்த நடிகை சரியான ஆதரவு கிடைக்காமல் தவித்தார். இப்போது நடிகரின் ஆதரவும் நட்பும் மீண்டும் கிடைத்துவிட்டது. கூப்பிட்டு தன் படத்தில் நாயகியாக்கியவர் செய்த இன்னொரு காரியம் தான் ஹைலைட். நடிகை லீட் ரோலில் நடித்துவரும் இரண்டு படங்கள் ஃபைனான்ஸ் இல்லாமல் முடங்கி கிடந்தன.

இரண்டு படங்களின் கடன்களையும் தீர்த்துவிட்டாராம் ஹீரோ. சரியான படங்கள் இல்லாமல் ஹீரோவே கஷ்டத்தில் தான் இருக்கிறார். பின்னே எப்படி? என்று கேட்டால் எல்லாம் கடன் தான் என்கிறார்கள்.
பார்த்து பிரதர் கடன் முடிஞ்சதும் கடைத்தெரு காலியாகிடப் போகுது!

English summary
Victory hero is now borrowing money from financiers to complete his girl friend's movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil