கடன் தொல்லையால் வாங்கிய ஃப்ளாட்களை விற்ற நடிகர்
ஒரு ஊர் பெயரை படமாக எடுத்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்த இயக்குநர் கம் ஹீரோ. பி, சி செண்டர்களுக்கான பல்ஸ் பிடித்து படங்கள் பண்ணியவர் சமீபகாலமாக சற்று தடுமாறுகிறார்.
வெளித் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம், சொந்தக் கம்பெனிக்கு ஒரு படம் என்று பேலன்ஸ் பண்ணி வரிசையாக படங்கள் செய்தவர் தனது கேரியரை தூக்கி நிறுத்த இப்போது சொந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு முந்தைய தோல்விகள் தந்த கடனால், தான் கஷ்டப்பட்டு வாங்கிய சில ஃப்ளாட்களை சமீபத்தில் விற்றுவிட்டாராம். ஆனாலும் மனம் தளராமல் 'சினிமால சம்பாதிச்சது தானே...' என்று சொல்லி வருகிறார்.
இதேபோல் பிக்கப் நடிகரும் தொடர் தோல்விகளால் தனக்கு சொந்தமான சொத்துகளை சமீபத்தில் விற்றது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications