'என்ன இப்படி கமென்ட் அடிக்கிறாங்க'... பாதியில் வெளியேறிய வாரிசு நடிகர்!
சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பிரஸ் ஷோ அது. ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் படம் பார்க்க வந்திருந்தனர். கூடவே இரண்டு இயக்குநர்களும் வந்திருந்தார்கள்.
பின் வரிசையில் அமர்ந்திருந்த அவர்கள், பத்திரிகையாளர்களுடன் ஜாலியாகப் பேசியபடி படம் பார்க்க ஆரம்பித்தனர்.
படம் ஏனோ தானோ என்றுதான் இருந்தது. ஹீரோவாக நடித்திருந்தவர் பிரபல நடிகரின் வாரிசு. அவர் நடிப்பும் படத்தின் தலைப்பைப் போலவே இருந்தது.
ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர்களும் அவர்களோடு இருந்த சில பத்திரிகையாளர்களும் கலாய்த்துக் கொண்டே இருந்தனர்.
இடைவேளை...
விளக்குகள் போடப்பட்டபோதுதான் தெரிந்தது படத்தின் ஹீரோவும் அந்த வரிசையில்தான் அமர்ந்திருக்கிறார் என்பது.
மீண்டும் படம் ஆரம்பித்தபோது, நடிகர் எஸ்கேப் ஆகியிருந்தார்!
Comments


Click it and Unblock the Notifications