»   »  இரட்டை சம்பள முறையைக் கடைபிடிக்கும் ஹீரோ!

இரட்டை சம்பள முறையைக் கடைபிடிக்கும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போது கையில் அதிகம் படம் வைத்திருப்பவர் அந்த ஹீரோதான். எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் மனிதர். வயதான வேடம், இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பது என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, தன் மனதுக்கு பிடித்து விட்டால் செய்து விடுகிறார்.

படம் ஒப்புக்கொள்ளும்போது இரண்டு விதங்களில் சம்பளம் கேட்கிறாராம். பெரிய தயாரிப்பாளர், கமர்ஷியல் படம் என்றால் அதிகமான சம்பளம். சின்ன படமாக இருந்தாலும் கூட கதை நல்ல கதை, கேரக்டர் கண்டிப்பாக பேசப்படும் என்றால் வழக்கமான சம்பளத்தில் இருந்து கணிசமான அளவுக்கு குறைத்துக் கொள்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்களும் இவர் மீது மட்டும் எந்தக் குறையும் சொல்வதில்லை

ஆனால் ஒரு படம் இப்படி, ஒரு படம் அப்படி என்பதில் கவனமாக இருக்கிறார்.

நல்ல பாலிசிதான்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Kavan hero is fixing two types of salary i.e, high amount for big banner and lesser amount for small producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil