கதையே ரெடி பண்ணாமல் கால்ஷீட் கேட்ட இயக்குநர்.. அடுத்து யார் படத்தில் தான் அந்த ஹீரோ நடிக்கப்போறாரு?

By Staff

சென்னை: பிரகாச நடிகர் அடுத்து யார் படத்தில் தான் நடிக்கப் போறாரு என்கிற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

விருது இயக்குநர் படத்தில் பிரகாச நடிகர் நடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் வெளியிட்ட அறிவிப்பு தான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமாகி உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பிரபல இயக்குநர் கதையையே இன்னும் முழுசா ரெடி பண்ணவில்லையாம்.

ஒடிடி நாயகன்

ஒடிடி நாயகன்

கொரோனா பரவல் குறைந்து தியேட்டர்கள் திறந்தாலும் தொடர்ந்து தனது படங்களை ஒடிடியிலேயே வெளியிட்டு சம்பாதித்துக் கொள்கிறேன் என்கிற முடிவிலே அந்த பிரகாச நடிகர் இருப்பதாகவும் அவரை ஒடிடி நாயகன் என்றே கோடம்பாக்கத்தில் கூப்பிட ஆரம்பித்து விட்டனர். இவரை தொடர்ந்து பல நடிகர்களும் தங்கள் படங்களை ஒடிடியில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடித்து தள்ளுறாரு

நடித்து தள்ளுறாரு

ஆந்தாலஜி, ஒடிடி படம் என அடுத்தடுத்து பல புராஜெக்ட்களை கையில் வைத்துக் கொண்டு சிறிய பட்ஜெட்டில் சும்மா நடித்துத் தள்ளி பெரிய தொகைக்கு ஒடிடி தளத்திற்கு விற்று லாபம் பார்த்து வருகிறார். மற்ற நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்கவே யோசிக்க இவர் ஆண்டுக்கு மூன்று படங்கள் வரை திட்டமிட்டு வைத்துள்ளாராம்.

நட்புக்கு மரியாதை

நட்புக்கு மரியாதை

பிரகாச நடிகர் நடிப்பில் இரு படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், மேலும், இரு இயக்குநருடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், திடீரென நட்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தன்னை இந்த அளவுக்கு ஆளாக்கி விட்ட அந்த இயக்குநருக்கும் ஒரு படம் பண்ணுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு விட்டார்.

அடுத்து யார் படம்

அடுத்து யார் படம்

விருது இயக்குநருடன் ஒரு படமும் மசாலா இயக்குநருடன் ஒரு படமும் நடிக்கப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென இப்படியொரு அறிவிப்பை பிரகாச நடிகர் அதிரடியாக வெளியிட்டு இருப்பதை பார்த்து பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்து யார் படத்தில் தான் இவர் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கதையே ரெடியாகல

கதையே ரெடியாகல

இதில் கூத்து என்னவென்றால், ஓரங்கட்டப்பட்ட நிலையில், மீண்டும் பிரகாச நடிகரை நாடி வந்த அந்த பிரபல இயக்குநர் இன்னமும் முழு கதையையும் ரெடி பண்ணவே இல்லை என்கிற ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளது. ஏன் பா கதையே ரெடி பண்ணாமல் கால்ஷீட்டு கேட்டு அந்த இயக்குநர் எப்படி வருவார்? என்றும் கேட்டு வருகின்றனர்.

ஹீரோ செய்த வேலை

ஹீரோ செய்த வேலை

நடிகர் தயாரிப்பில் ஒரு படம் பண்ண போவதாக தான் முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், எதற்கு இன்னொரு ஹீரோவை வைத்து அந்த இயக்குநர் எடுக்க படம் பண்ணனும், நமக்கே பண்ணட்டுமே என வாய்ப்பை திடீரென தூக்கிக் கொடுக்க அந்த கதையை பிரகாச நடிகருக்கு ஏற்றார் போல மாற்றும் முயற்சியில் பிரபல இயக்குநர் ஈடுபட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு அடுத்த படம் யாருடன் பண்ண போகிறேன் என்பதை நடிகர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X