அச்சச்சோ அந்த வீடே அதிர்ஷ்டமில்லையே.. இந்த அறிவிப்பாவது முழுசா நிறைவேறுமா? டவுட்டில் ஹீரோ!
சென்னை: இதுவரை பல பட அறிவிப்புகளை அந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பாஸ் நடிகர் அறிவித்துள்ளார்.
ஆனால், அந்த படங்கள் எல்லாம் ஆரம்பித்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்ட கதையால் இளம் மாஸ் நடிகர் ஏகப்பட்ட டவுட்டில் உள்ளாராம்.
பாஸ் நடிகர் கேட்டால் தட்ட முடியாது என்பதற்காக ஓகே சொல்லி உள்ள நடிகர் எப்படியாவது இந்த முறை எந்த தவறும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

அந்த வீட்டில் அறிவிப்பு
பெரிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான அதன் முதல் சீசனில் அறிவிக்கப்பட்ட அந்த படமே இன்னமும் வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பை கேட்டதும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பாஸ் நடிகரும் ஏகப்பட்ட அறிவிப்புகளை நிகழ்ச்சியின் இறுதி விழாவில் சொல்லி வரும் நிலையில், ஒன்றுமே ரிலீஸ் ஆகவில்லை என்பது தான் சோகமான உண்மையே.

வாய்ப்பு தருகிறேன்
சில போட்டியாளர்களுக்கு டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு கடைச் நேரத்தில் நிகழ்ச்சி நிர்வாகம் அல்வா தந்து அனுப்பும் போது, நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க.. என் தயாரிப்பில் உங்களை ஹீரோவாக்குறேன் என அந்த பாஸ் நடிகர் உறுதியளித்த நிலையில், அந்த படங்களும் இன்னமும் ஆரம்பமாகாதது குறிப்பிடத்தக்கது.

அவருக்கே ஒர்க்கவுட் ஆகல
சில இரண்டாம் பாக படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலேயே செம சந்தோஷமாக அறிவித்த நிலையில், ஏகப்பட்ட தடங்கல்கள் உருவாகி தனது படமே இன்னமும் முழுதாய் நிறைவடையாமல் கிடப்பில் கிடக்கும் நேரத்தில் புதிதாக இன்னொரு அறிவிப்பையும் அதே நிகழ்ச்சியில் வைத்து எப்படி தைரியமாக அறிவிக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

துணை இருக்கு
முழுவதுமாய் டென்ஷனை தனது பக்கமே வைத்துக் கொள்ளாமல் இந்த முறை ஒரு துணையுடன் தான் புதிய விஷயத்தை ஆரம்பிக்கிறார் அந்த பாஸ் நடிகர். அதன் காரணமாகவே அந்த இளம் மாஸ் ஹீரோவும் தைரியமாக நண்பர்கள் கிளப்பிய டவுட்டுகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு இந்த புராஜெக்டில் இறங்கி உள்ளாராம்.

வசூலுக்காக
பாக்ஸ் ஆபிஸ் வசூல் மன்னனாக இளம் மாஸ் ஹீரோ மாறியுள்ள நிலையில், அவரை வைத்து படம் எடுத்தால் நம்மை படம் கொடுக்கிற வசூல் உடன் பெரிய வசூலை வாரிக் கொடுத்து லாபத்தை பார்க்கலாம் என்பதற்காகவே இப்படியொரு கூட்டணியை அமைத்துள்ளாராம் பாஸ் நடிகர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சந்தோஷம் தான்.


Click it and Unblock the Notifications











