பாதிக்கு மேல் படத்தை அந்த நடிகரே இயக்குகிறாராம்.. இந்த படமும் என்ன ஆகப் போகுதோ.. தவிக்கும் டைரக்டர்?

By Staff

சென்னை: சமீப காலமாக படங்கள் பாதி வரை நல்லா இருப்பதும், அதன் பின்னர் சொதப்பவும் காரணம் இயக்குநர்களை உட்கார வைத்து சில நடிகர்களே இயக்கும் வேலையை பார்க்க ஆரம்பிப்பது தான் என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் நிலவி வருகின்றன.

பிரபல நடிகருக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை அதிகம் இருப்பதால் தனது புதிய படத்தை தானே இயக்கும் வேலைகளை பார்த்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பொதுவாகவே அவர் நடிக்கும் பல படங்களை அவரே இயக்க ஆரம்பித்து விடுவார் என்றும் இயக்குநர்கள் சும்மா பெயருக்கு மட்டும் தான் என்கின்றனர்.

ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு

ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு

சமீப காலமாக வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு, செகண்ட் ஹாஃப் சொதப்பல் என சொல்லக் காரணமே பாதி படத்திற்கு பிறகு நடிகர்களே இயக்குநர்களாக மாறி கதையில் சண்டைக் காட்சி இப்படி இருக்கணும், பெரிய துப்பாக்கிகளை வைத்து சுடணும், 100 பேர் பறக்கணும் என சொல்வது தான் என்கின்றனர்.

இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு


சீனியர் இயக்குநர்கள் படங்களில் நடிகர்கள் அதிகம் நடிக்காமல் இருக்க காரணமே, அவர்களுக்கு கட்டுப்பட்டு நடிக்க முடியாது என்பதால் தான் என்கின்றனர். இளம் இயக்குநர்களை டாப் இயக்குநர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்று விடுவதே நடிகர்கள் சொல்வதை ஆமாம் சாமி போட்டு இயக்குநர்கள் கேட்பதால் தான் எனக் கூறுகின்றனர்.

ஒல்லி நடிகர்

ஒல்லி நடிகர்

அதிலும், அந்த ஒல்லி நடிகர் தனது படங்களை இயக்குவதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறாராம். அண்ணன் இயக்கிய படத்திலேயே அப்படியொரு மோசமான கிளைமேக்ஸ் வைக்க காரணமே நடிகரின் செயல் தான் என்கின்றனர். நடிகைகளை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றில் தலையிட்டு வந்த நடிகர்கள் சமீப காலமாக இயக்கத்தில் தலையிட்டு இயக்குநர்களை புலம்ப வைத்து வருகின்றனர்.

சொல்றத செய்

சொல்றத செய்

ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் இயக்குநர்கள் என்பதால் மரியாதையே கொடுப்பது இல்லை என்றும் தனது கதைக்கு ஒத்துவராத காட்சி என்று எடுத்து சொன்னாலும், இளம் நடிகர்கள் கூட இப்போதெல்லாம் கேட்பதில்லை என்றும் தான் சொல்வதை செய் என மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளவும் இதுதான் காரணமாம்.

இயக்குநர் புலம்பல்

இயக்குநர் புலம்பல்

தொடர்ந்து தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் சொதப்பினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதிதாக நடித்து வரும் படத்தில் ஏகப்பட்ட தலையீடுகளை செய்வது மட்டுமின்றி சில காட்சிகளை அந்த நடிகரே தனக்கு வேண்டியது போல இயக்கி வருகிறாராம். முன்னதாக அந்த இயக்குநர் இயக்கத்தில் நடித்த அண்ணனும் இதே வேலையை தான் செய்த நிலையில், படம் பாதிக்கு மேல் சொதப்பியது. இந்நிலையில், தம்பியும் தலையிட்டு வருவதால் பெரிய பட வாய்ப்பை நழுவ விட முடியாதே என அந்த இயக்குநர் புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X