நடிகையின் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுக்கும் ஹீரோ
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகைக்கு அவருடன் காதல் என்று கிசுகிசுக்கப்படும் பாஸ் நடிகர் இன்று இரவு பார்ட்டி கொடுக்கிறாராம்.
ஏற்கனவே ஒரு படத்தில் ஜோடி சேர்ந்த இந்த ஹீரோவும், ஹீரோயினும் அண்மையில் கிங் குயீன் படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தனர். படமும் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நயன நடிகை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் பாஸ் நடிகர் தன்னுடன் காதல் என்று கிசுகிசுக்கப்படும் நயன நடிகையின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று இரவு அவருக்கு பார்ட்டி கொடுக்கிறாராம்.
இந்த பார்ட்டியில் நடிகை மற்றும் பாஸ் நடிகருக்கு நெருக்கமான சினிமா நண்பர்கள் கலந்து கொள்கிறார்களாம். பார்ட்டியில் நடிகையின் முன்னாள் காதலரான விரல் வித்தை நடிகர் பாஸ் சார்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications