எவ்ளோ நாள் தான் மறைக்கிறது.. இந்த காதலர் தினத்துக்காவது சொல்லிடலாம்.. நடிகையை அவசரப்படுத்தும் ஹீரோ?

By Staff

சென்னை: இளம் ஹீரோவும் இளம் நடிகையும் ரகசியமாக காதலித்து வரும் நிலையில், அவர்களின் காதல் லீலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே விஷயம் லீக் ஆகி விட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விடலாமே என்ன பயம் என நடிகர் நடிகையிடம் கேட்டுள்ளாராம்.

ஆனால், இப்போதைக்கு அந்த காரணத்திற்காக வெளிப்படுத்த வேண்டாம் என நடிகை மறைத்து வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

நடிகருடன் காதல்

நடிகருடன் காதல்

இளம் நடிகருடன் இணைந்து நடித்து படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இருவருக்குள்ளும் ஃபயர் பத்திக்கிச்சாம். அந்த படத்தின் வெற்றியில் காதல் முளைத்த நிலையில், பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், அந்த நடிகரும் நடிகையும் தொடர்ந்து தங்கள் காதலை ரொம்பவே ஸ்ட்ராங்காக வளர்த்து வருகின்றனர்.

ரகசியமாக

ரகசியமாக

ஆனால், தாங்கள் காதலிக்கும் விஷயத்தை தொடர்ந்து ரகசியமாக இருவருமே கையாண்டு வருகின்றனர். அப்படி இருந்தும் சில தகவல்கள் அவர்களையும் அறியாமல் கசிந்த நிலையில், அந்த நடிகர்களின் ரசிகர்கள் எப்போது இந்த நட்சத்திர ஜோடி தங்களின் காதலை சொல்லப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

லிப் லாக்கிற்கு நோ

லிப் லாக்கிற்கு நோ

அந்த நடிகரை காதலிக்க தொடங்கியதில் இருந்து அந்த ஹீரோயின் பெரிய பட வாய்ப்புகள் கிடைத்தாலும், லிப் லாக் காட்சிக்கு மட்டும் நோ சொல்லி வருகிறாராம். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் எல்லாம் காதலருக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதால் அந்த இடத்தை ஃப்ரீயாகவே வைத்திருக்கிறார் நடிகை.

நடிகர் கொடுக்கும் பிரஷர்

நடிகர் கொடுக்கும் பிரஷர்

சமீபத்தில் இருவரும் காதலிக்கின்றனர் என்றும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்கிற தகவல்கள் கசிந்த நிலையில், நடிகருக்கு நெருக்கமானவர்கள் விஷயத்தை வெளிப்படுத்தி விடலாமே எனக் கேட்டுள்ளனர். அந்த இளம் ஹீரோவும் நடிகையிடம் ஏன் காதலை வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். இந்த காதலர் தினத்துக்கு வெளிப்படையாக சொல்லி விடலாமா எனக் கேட்டுள்ளார்.

நோ சொன்ன நடிகை

நோ சொன்ன நடிகை

ஆனால், நடிகை இதற்கு முன்பாக பல முறை இந்த விஷயம் குறித்து நடிகர் பேச்சை எடுக்கும் போதெல்லாம் எப்படி நோ சொல்லி வந்தாரோ அதே போல இந்த முறையும் வேண்டாம் என சொல்லி தடுத்து வருகிறாராம். அதற்கான காரணத்தையும் நடிகருக்கு தெளிவாக புரியும் படி கூறினாலும், நடிகருக்கு நடிகையின் காரணங்கள் ஸ்ட்ராங்காக இல்லை என நினைப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

தற்போது தான் பெரிய நடிகர்கள் படங்களில் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சில ஆண்டுகள் பொறுமையாக இருந்து நம் காதலை வெளிப்படுத்துவோம். வெளியே இப்பவே சொல்லிவிட்டால், தயாரிப்பாளர்களும், டாப் ஹீரோக்களும் என்னை ஹீரோயினாக புக் செய்ய யோசிப்பார்கள் பட வாய்ப்பு மற்றும் உருவாக்கி வைத்துள்ள மார்க்கெட் குறைந்து விடும் என நடிகை காரணம் சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ள நடிகரின் மனம் மறுப்பதாக கூறுகின்றனர்.

திருமணம் செஞ்சிக்கலாம்

திருமணம் செஞ்சிக்கலாம்

ஏகப்பட்ட நடிகைகள் திருமணம் செய்து கொண்டு நடிக்கவில்லையா? எனக் கேட்ட நடிகர் நாமும் திருமணம் செய்துக் கொண்டு நடிக்கலாம். நான் உன் வளர்ச்சிக்கு ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன் என வாக்கு கொடுத்துள்ளாராம். ஆனால், இப்போ இப்படித்தான் பேசுவ, திருமணத்துக்கு பிறகு உன் நடவடிக்கைகள் மாறும். பிறகு பிரச்சனை வரும், இன்னும் சிறிது காலம் எனக்காக காத்திருக்க மாட்டீயா என நடிகை செல்லமாக பேசி நடிகரை இப்போதைக்கு ஆஃப் செய்து வைத்துள்ளார் என்கின்றனர். இந்த காதலர் தினத்துக்கும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த போவதில்லை என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X