சர்ச்சை நடிகையை பரிந்துரைத்த ஹீரோ: போச்சே போச்சேன்னு புலம்பிய வாரிசு நடிகை
சென்னை:
உச்ச நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சர்ச்சை நடிகைக்கு எப்படி கிடைத்தது என்பது தெரிய வந்துள்ளது.
உச்ச நடிகர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக வாரிசு நடிகையை நடிக்க வைக்க நினைத்தாராம் இயக்குநர். அந்த இயக்குநரின் முந்தைய படத்திலும் வாரிசு நடிகை தான் ஹீரோயின்.
உச்ச நடிகருடன் வாரிசு நடிகை ஜோடி சேரப் போவதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

வாரிசு நடிகை
வாரிசு நடிகையின் பெயர் அடிப்பட்ட நேரத்தில் திடீர் என்று அந்த படத்தின் ஹீரோயின் சர்ச்சை நடிகை என்றார்கள். பின்னர் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஹீரோயின் மாறியதற்கு பின்னால் இருப்பது உச்ச நடிகராம்.

வேண்டாம்
வாரிசு நடிகையையா நடிக்க வைக்கப் போகிறீர்கள்?, சர்ச்சை நடிகை பொருத்தமாக இருப்பாரே, அவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்ல சார் என்று உச்ச நடிகர் இயக்குநரிடம் தெரிவித்தார். அவரே கூறிய பிறகு இயக்குநர் முடியாது என்றா கூறப் போகிறார்.

முன்பும் கூட
உச்ச நடிகர் தனது படத்திற்கு சர்ச்சை நடிகையை பரிந்துரை செய்வது இது முதல் முறை அல்ல. முன்பும் கூட ஒரு முறை பரிந்துரை செய்துள்ளார். வாரிசு நடிகை தன் மகள்களை விட சின்னப் பொண்ணு என்பதால் சர்ச்சை நடிகையை அவர் பரிந்துரை செய்திருக்கலாம்.

படம்
படத்தில் உச்ச நடிகருக்கு சர்ச்சை நடிகை ஜோடி இல்லை என்றும் கூறப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசைப்படும் வாரிசு நடிகை உச்ச நடிகரின் பரிந்துரையால் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பினாராம்.


Click it and Unblock the Notifications











