துரத்தும் நடிகைகள்... பயந்து ஓடும் பிரபல ஹீரோ... காரணம் இது தான்!
நடிகர் ஒருவர் ஹீரோயின்களை பார்த்து பயந்து ஓடும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: படவாய்ப்புக்காக சிபாரிசு பண்ணச் சொல்லி துரத்தும் நடிகைகளை நாசுக்காக தவிர்த்து வருகிறார் பிரபல நடிகர் ஒருவர்.
துணை நடிகராக இருந்து மக்கள் விரும்பும் நாயகனாக உயர்ந்தவர் இந்த நடிகர். ஆரம்ப காலத்தில் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு தொடர்ந்து சிபாரிசு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அதிகம் சர்ச்சைகளில் அவர் சிக்கினார்.

இந்த காரணத்தினாலேயே அவரது நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. இதனை அவரது நலம் விரும்பிகள் சுட்டிக் காட்ட, விழித்துக் கொண்டார் நடிகர்.
இனி நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார். இயக்குநர் கையைக் காட்டும் கதை நாயகிகளுடன் மட்டுமே சேர்ந்து நடித்து வருகிறார். இதனால் யாருக்கும் அவர் சிபாரிசு செய்வதில்லை.
ஆனால், பழைய ஞாபகத்தில் நடிகரைப் பார்க்கும் போதெல்லாம் சிபாரிசு பண்ணச் சொல்லி சில நடிகைகள் டார்ச்சர் செய்து வருகிறார்கள். இதனால் மீண்டும் கிசுகிசுக்களில் சிக்க விரும்பாத நடிகர், சம்பந்தப்பட்ட நடிகைகளை நாசுக்காக தவிர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











