போன் செய்த பிரபல தயாரிப்பாளர்: 10 நிமிஷம் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிய ஹீரோ
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குனர் ஒருவர் பிரபல ஹீரோவிடம் 10 நிமிடம் திட்டு வாங்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரபல இயக்குனர் ஒருவர் சிலருக்கு போன் போட்டு அழைத்துள்ளார். மேலும் சிலருக்கு மெகா ஸ்டார் போன் போட்டுள்ளார்.

திமிராக நடந்து கொள்வதற்கு பெயர் போன பெரிய இடத்து ஹீரோவுக்கு போன் செய்துள்ளார் அந்த தயாரிப்பாளர். சார், மீட்டிங் நடக்கிறது கொஞ்சம் வாங்க என்று அவர் அழைக்க அந்த ஹீரோவோ டென்ஷன் ஆகிவிட்டாராம்.
போன் போட்ட தயாரிப்பாளரை 10 நிமிடமாக கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்துள்ளார் ஹீரோ. அவர் பேச்சை கேட்க முடியாமல் லைனை கட் பண்ண பயந்த தயாரிப்பாளர் காதுகளை பொத்திக் கொண்டாராம்.
ஹீரோ போனை வைத்த பிறகே தயாரிப்பாளர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளரும் தெலுங்கு திரையுலகில் பெரிய ஆள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











