எனக்கு பிடிக்கல, கதையை மாத்தும்யா: தாடிக்கார இயக்குநரிடம் கூறிய ஹீரோ
சென்னை: இளம் ஹீரோ ஒருவருக்கு இயக்குநர் தன்னிடம் சொன்ன கதை பிடிக்கவில்லையாம்.
பெரிதாக லுக் இல்லை, பின்னணி இல்லாமல் பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகரானவர் அந்த நடிகர். அவர் நடிக்க வந்த புதிதில் அவரை பார்த்துவிட்டு இவன்லாம் ஹீரோவா என்று பலர் கிண்டல் செய்தார்கள்.

தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தன் வளர்ச்சி மூலம் பதில் அளித்துள்ளார் அவர். விறுவிறுன்னு வளர்ந்து வந்த அவருக்கு அண்மை காலமாக நேரம் சரியில்லை. அவரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றன.
ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் தனக்கு ராசியான இயக்குநரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் நிச்சயம் ஹிட்டாகி நடிகரின் பெயரை காப்பாற்றும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவர் தாடிக்கார இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த அறிவிப்பும் கூட வெளியானாது. ஆனால் இயக்குநர் கூறிய கதை நடிகருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் கதையை மாற்றுமாறு கூறியுள்ளாராம்.
அந்த இயக்குநர் கடைசியாக இயக்கிய படத்தை சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் தான் வாவ், மரண மாஸ், செம என்று கூறி கொண்டாடினார்கள். மற்றவர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் இந்த நடிகர் கதையை மாற்றச் சொல்லியுள்ளார்.
கதை விவகாரத்தால் நடிகரும், தாடிக்காரரும் சேர்ந்து பணியாற்றும் படம் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் படம் ஒன்றை தயாரிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











