அய்யோ அந்த ஹீரோயினா வேண்டாம்… அலறும் ஹீரோக்கள்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!

சென்னை: சமீபத்தில் வெளியான அந்த ஒல்லி பிச்சான் நடிகர் படத்தில், லூசு ஹீரோயினாக நடித்த அந்த நடிகை பில் கட்டாமல் ஓடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தெலுங்கு பட தயாரிப்பாளரும் அந்த நடிகையை வச்சி வாங்கு வாங்கென வாங்க, தன் பக்க நியாயத்தையும் அந்த நடிகை சமீபத்தில் வெளியிட்டார்.

ஆனால், பாவம் பார்ப்பார்கள் என்று நினைத்த அந்த நாயகி, தன்னை பற்றிய சில உண்மைகளை உளர, அதுவே அவருக்கு ஆப்பாகவும் முடிந்துள்ளது.

இப்போதான்

இப்போதான்

சினிமா துறைக்கே அந்த நடிகை ரொம்ப புதுசு, சில ஆண்டுகளாகத்தான், ஒரு சில படங்களில் கமீட் ஆகி வருகிறார். அழகா இருக்கிறாரே தவிர, நடிப்பில் இதுவரை ஒன்றும் பிரமாதம் காட்டவில்லை. இந்நிலையில், சினிமா வாழ்க்கை தொடங்கிய, கொஞ்ச காலத்திலேயே, இப்படி ஒரு சிக்கலில் அந்த நடிகை மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.

பில் பிரச்சனை

பில் பிரச்சனை

அந்த வெங்காய வெடி படத்தில் நடித்த அந்த இளம் நடிகை, அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார். அதன் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக வந்த அந்த நடிகை, நிகழ்ச்சிக்கு செல்லாமல் உல்லாசமாக ஹோட்டலிலேயே தூங்கியுள்ளார். இதனால், அவரது செலவை ஏற்க தயாரிப்பு தரப்பு மறுத்து விட்டது பெரிய பிரச்சனையை கிளப்பியது.

அலர்ஜி

அலர்ஜி

இந்நிலையில், தனது பக்க நியாத்தை கூறுகிறேன், கேளுங்க மக்களே என அந்த இளம் நடிகை, தனக்கு அலர்ஜி எற்பட்டதால், தான் அந்த விழாவுக்கு வரமுடியவில்லை என ஓபனாக கூறியது. அவருக்கே பெரிய ஆபத்தாக முடிந்துள்ளது. இதைத் தான் தவளை தன் வாயால் கெடும் என சொல்வார்கள்.

அலறும் ஹீரோக்கள்

அலறும் ஹீரோக்கள்

தனக்கு அலர்ஜி இருப்பதாக, அந்த இளம் நடிகை ஓப்பனாக கூறியுள்ள, நிலையில், அந்த அலர்ஜி புடிச்ச நடிகையுடன் இனிமே நடிக்க முடியாது என இளம் ஹீரோக்கள், அதிரடியாக கூறி வருகின்றனராம். இதனால், சர சரவென ஏறிய அந்த நடிகையின் மார்க்கெட், ஒரே அடியாக அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X