இளம் நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து மிக வேகமாக வளர்ந்துவரும் நடிகை ஒரு பெரிய சிக்கலில் மாட்டித் தவிக்கிறார்.
அவர் நடித்த ஒரு படம் அடல்ட் 'கன்டென்டுடன்' வெளியானது. டபுள் மீனிங்காக இல்லமால் நேரடியாகவே அர்த்தம் ஆகும் சில டயலாக்குகளை துணிந்து பேசியிருந்தார் நடிகை. அந்த படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அதே மாதிரியான ரோல்களாக வருகின்றனவாம்.
நான் முன்னணி ஹீரோயின் ஆகணும், அஜித், விஜய்க்கு ஜோடியா நடிக்கணும்னு திட்டம்லாம் வெச்சிருக்கேன். ஆனா இவங்க என்னை பிட்டு பட நடிகையாக்கிடுவாங்க போல... என்று அப்படி வரும் ரோல்களை வாய்ட் செய்து விடுகிறாராம்.
அதே டீம் மீண்டும் இணையும் படத்தில் கூட தான் நடிக்காததை சொல்லி அவாய்ட் செய்துவிடுகிறாராம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.