உயிர் நடிகருக்கு சம்பள பாக்கி வைத்த பெரிய சம்பள இயக்குநர்!
மிக இளம் வயதிலேயே தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அந்த இட்லி இயக்குநர். அவரது சம்பளத்தைப் பார்த்து கோலிவுட்டே வியக்கிறது.
பெரிய ஹீரோக்களை வைத்து மட்டுமே இயக்குவேன் அப்போது தான் சம்பளம் உயரும் என்று கணக்குப் போட்டு இயங்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரே ஒரு நடிகருக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார். இந்த இயக்குநரின் தயாரிப்பில் உருவான ஒரு பேய் படத்தில் உயிர் நடிகர் நடித்தார் அல்லவா? அவருக்குத்தான் இந்த சம்பள பாக்கி. வெறும் 50 லட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவர் அதன்பின் எதுவுமே தரவில்லையாம்.
கேட்டால் படத்தால் நஷ்டம் என்று சொல்கிறாராம். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் நடிகர்.
Comments


Click it and Unblock the Notifications