»   »  யப்பா... உலக மகா பப்ளிசிட்டிடா இது... ஹைவே நடிகரை பார்த்து நக்கலடிக்கும் கோலிவுட்!

யப்பா... உலக மகா பப்ளிசிட்டிடா இது... ஹைவே நடிகரை பார்த்து நக்கலடிக்கும் கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பப்லிசிட்டி தேடும் நடிகர். கைக்கொட்டி சிரிக்கிறது கோலிவுட்.

நடித்தது நாலு படங்கள். ஓடியது கெஸ்ட் ரோலில் நடித்த பெரிய நம்பர் நடிகையின் ஹாரர் படம் ஒன்று தான். ஆனால் அந்த ஹைவே நடிகர் பப்ளிசிட்டிக்காக பண்ணும் காரியங்களை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது கோலிவுட்.

கையில் எடுத்திருப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை தனது பப்ளிசிட்டிக்கு ஹீரோ பயன்படுத்துவதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். படம் எதுவும் இல்லாமல் சும்மா இருக்கும் நடிகர் யாராவது விழா நடத்தினால் அங்கே அழையா விருந்தாளியாக சென்று மைக்கை பிடுங்கிக்கொள்கிறாராம். ஒவ்வொரு மீடியாவுக்காக கால் பண்ணி தன்னை பற்றி எழுதுமாறும் டார்ச்சர் தருகிறாராம்.

Highway actor's publicity

ஒரு மேடையில் தல நடிகர் அரசியலுக்கு வருவதற்காக ப்ளுப்ரிண்ட் போட்டு வைத்துள்ளார் என்று கட்ட கடைசியாக மைக்கை பிடுங்கி அறிவித்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டார். இதைக் கேள்விபட்ட தல நடிகர் 'இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா?' என்று கேட்டதோடு இவரின் பப்ளிசிட்டி நாடகங்களை கேட்டு சிரித்தாராம்.

இவரது பப்ளிசிட்டி லேட்டஸ்ட் வரவு நட்சத்திர விழாவில் அடிபட்டது என்று சொல்லி போஸ் தந்ததோடு அது பற்றி 24 வரிகளுக்கு ஒரு செய்தியை தயாரித்து மீடியாக்களுக்கு அனுப்பியது.

முதல் வரியை மீண்டும் படித்துக்கொள்ளவும்!

Read more about: gossip கிசுகிசு
English summary
That highway actor's publicity tortures going too much level. K town is laughing about his latest stunt

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X