»   »  'ஒல்லி' நடிகரால் இசையமைப்பாளரை மாற்றிய 'ஹிட்' இயக்குநர்

'ஒல்லி' நடிகரால் இசையமைப்பாளரை மாற்றிய 'ஹிட்' இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லி நடிகரால் ஹிட் இயக்குநர் தனது ஆஸ்தான இசையமைப்பாளரைத் தூக்கிவிட்டு, சந்தோஷமானவரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

ஹிட் இயக்குநரின் ஆரம்பப் படம் தொடங்கி சமீபத்தில் வெளியான போலீஸ் படம் வரை இசை நடிகர்தான் இசையமைப்பாளர்.

Hit Director Change Music Composer

ஆனால் பெரிய பட்ஜெட்டில் ஹிட் இயக்குநர் இயக்கும் ரவுடி படத்துக்கு, இசை நடிகரை விட்டு சந்தோஷமானவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

தளபதி நடிகரால் ஒல்லி நடிகருக்கும், இசை நடிகருக்குமான பிரச்சினை தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. இதனால் ஒல்லி நடிகர் தான் இசையமைப்பாளரை மாற்றச் சொன்னாராம்.

ஹிட் இயக்குநரும் நடிகரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை நடிகரைக் கழட்டிவிட்டிருக்கிறார். விஷயம் அறிந்தவர்கள் இது எங்கு போய் முடியுமோ? என்று ஆதங்கப்படுகின்றனர்.

இசை நடிக்க வந்த புதிதில் இருந்தே இருவருக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பது தான் மேற்படி புலம்பல்களுக்குக் காரணம்.

English summary
Sources said Hit Director Changed Music Composer His Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil