ஒரே ரூமில் 5 பேர்.. பட வாய்ப்புக்காக வரம்பு மீறிய நடிகை.. கடைசியில் பலிகாடான இயக்குநர்!
சென்னை: கோலிவுட்டில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த ஹிட் பட நடிகை. படவாய்ப்பு இல்லாத போது விவகாரமான கதையில் நடித்துள்ளார். குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இந்த நேரத்தில், அந்த விவகாரமான சீன் வெளியில் வந்தால் மானம் போய்விடும் என, எடிட்டருடன் திட்டம் போட்டு இயக்குநரை பலிகாடாக ஆக்கி உள்ளார்.
அழகான கண்களை கொண்ட அந்த நடிகையின் தந்தை தமிழராக இருந்தாலும் அம்மா கன்னடர் என்பதால், நடிகை படித்தது எல்லாமே அண்டை மாநிலமான பெங்களூருவில் தான். பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்த போது, கன்னட படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பட வாய்ப்பு கிடைத்தாலும், இவருக்கு நடிக்கவரவில்லை. இதனால், அந்த கன்னட படம் வெளியானதும், கன்னட பத்திரிக்கை ஒன்றில் இந்த நடிகைக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராது போல என செய்தி வெளியானது. இதைப்பார்த்து கடுப்பான அந்த நடிகை, பெங்களூரிலேயே நடிப்பு பயிற்சி ஒன்றில், நடிக்க கற்றுக் கொண்டார். அதன் பிறகு சோஷியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

சினிமாவில் பிரபலமானார்: இணையத்தில் இவரின் போட்டோவைப் பார்த்த, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒரு நடிகர் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது தொடர்ந்து அந்த ஹிட் நடிகைக்கு தமிழ் சினிமாவில் நடிக்க அடுத்தடுத்த வாய்ப்பு வந்தது. அப்போது தான், முதல் பட இயக்குநருடன் பல இடத்தில் சேர்ந்து ஊர் சுற்றியதால், இருவர் குறித்தும் இணையத்தில் செய்திகள் பரவியதால், அந்த இயக்குநரிடம் இனிமேல் நட்பு வேண்டாம் அதை துண்டித்துக்கொள்வோம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
விவகாரமான காட்சி: இப்படி இந்த நடிகை வளர்ந்து வரும் இந்த நேரத்தில், இவர் சினிமாவில் பட வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு படத்தில் விவகாரமான காட்சியில் அதாவது படுக்கையறை காட்சியில் அத்துமீறி ஆபாசமாக நடித்த திரைப்படம், இத்தனை ஆண்டு காலமாக பண பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது, பண பிரச்சனை தீர்ந்து அந்த படம் வெளியாக தயாரான செய்தி, இந்த ஹிட் நடிகையின் காதுக்கு வர, அதில் நாம் ஆபாசமாக நடித்து இருக்கோமே, அந்த படம் மட்டும் இப்போது வெளியானால் நம்முடைய இமேஜ் என்ன ஆகும். என பயந்து போன அந்த நடிகை அந்த இயக்குனருக்கே தெரியாமல், எடிட்டருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, 20 நிமிடம் வரும் அந்த ஆபாச காட்சியவே படத்தில் இருந்து தூக்கி விட்டார்.
இயக்குநருக்கு ஆப்பு: படத்தின் முதல் காட்சியை பார்த்து ஷாக்கான அந்த இயக்குனர், அந்த நடிகை நடித்த, அந்த படுக்கை அறை காட்சி வராததால் படத்தில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் படம் இரண்டு நாட்களிலேயே ஊத்திக் கொண்டது. இது குறித்து இயக்குனர் தற்போது இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். பார்ப்பதற்கு பூனை போல் இருக்கும் நடிகை, இயக்குனரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தால் கூட ஓரளவு கவர்ச்சி காட்சியை கட் செய்து இருக்கலாம், ஆனால் இவர் இயக்குனரிடம் பேசாமல் நேரடியாக அந்த 20 நிமிட காட்சியை தூக்கி அந்த இயக்குனருக்கு பெரிதாக ஆப்பு வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











