பிக்கப் டிராப் நடிகரின் ‘குடும்ப’ விழாவிற்கு குதிரை நடிகை ஏன் போகலை தெரியுமா..?
சென்னை: கடந்த வாரம் பிக்கப் டிராப் நடிகர் தனது தயாரிப்பில் தனது உடன்பிறப்பு நடித்த படத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார். இந்த விழாவிற்கு தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளையுமே அழைத்து அமர்க்களப் படுத்தியிருந்தார் நடிகர்.
தங்களது பட விழாவிற்கே போகாத பல நடிகைகள் கூட விழாவிற்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் தர, மிகவும் எதிர்பார்க்கப் பட்ட குதிரை நடிகை மட்டும் மிஸ்ஸிங். காரணம் என்ன என விழாவிற்கு வந்திருந்தவர்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
அதாவது நடிகை பாரின் படப்பிடிப்பில் பிசி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டபோதும், பெரிய நம்பர் நடிகை வருவதாக கூறியதாலேயே விழாவை குதிரை நடிகை புறக்கணித்து விட்டாராம். ஏனெனில் தெலுங்கில் நம்பர் நடிகைக்கும், குதிரை நடிகைக்கும் தான் தொழில் போட்டி நிலவுகிறதாம்.
இந்த உட்கட்சிப் பூசலால், கடைசி நேரத்தில் சின்ன நம்பர் நடிகையை அழைத்து விழாவைச் சிறப்பிக்கச் சொன்னாராம் நடிகர். ஆனால், முன்னதாக நம்பர் நடிகை பாடல்களை வெளியிட அதை குதிரை நடிகை பெறுவதாகத் தான் திட்டமிடப்பட்டிருந்ததாம்.


Click it and Unblock the Notifications











