சண்டை போட்டவரிடமே சரண்டர் ஆன பயில்வான்.. ரூட்டு விட்டவரையே ஜோடியாக்கும் முயற்சி நடக்குதாம்!
சென்னை: விருது விழாவில் விமர்சித்தவரை விளாசிய பயில்வான் சண்டை போட்டவரிடமே சரண்டராகி புதிய படத்தை தொடங்கி உள்ளார்.
பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகைகள் மனங்களை கவர்ந்தவர் பயில்வான்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஹீரோ வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்த அவருக்கு தற்போது அசத்தலான ஜாக்பாட் அடித்துள்ளது.

ஏகப்பட்ட பிரச்சனை
ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அந்த பயில்வான் ஏகப்பட்ட பிரச்சனைகளை பண்ணியே பிரபலமானார். எந்த அளவுக்கு அவருக்கு ஹேட்டர்ஸ் இருந்தார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் குறிப்பாக ரசிகைகளும் குவியத் தொடங்கினர்.

வெளியே வந்ததும் வாய்ப்பு
அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் சிறப்பான வாய்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த அந்த பயில்வானுக்கு பல மாதங்களாக பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. அவரும் பொறுமையாக காத்திருந்து பெரிய வாய்ப்புக்காகவே வெயிட் பண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

விருது விழாவில் சண்டை
விருது விழா ஒன்றில் தன்னை விமர்சனம் செய்தவர் பற்றி வெளிப்படையாக விளாசித் தள்ளி மீண்டும் ஒரு பெரிய பரபரப்பை கிளப்பினார். அந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், தற்போது இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது.

சண்டை போட்டவரிடமே சரண்டர்
பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஹீரோ வாய்ப்பு கடைசியாக யாரிடம் அவர் சண்டை போட்டாரோ அவரிடம் இருந்தே கிடைத்துள்ளது. சண்டை போட்டவரிடம் சரண்டர் ஆன நிலையில் தான் பயில்வானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சண்டை போடுவதும் சரண்டர் ஆவதும் அவருக்கு கை வந்த கலை என்பதை அந்த நிகழ்ச்சியிலே ரசிகர்கள் கண்டு உணர்ந்துள்ள நிலையில், இது சாதாரண விஷயம் தான்.

அவரா ஹீரோயின்
அதே வீட்டில் பயில்வானை ரூட்டு விட்டு சுற்றித் திரிந்த அந்த போட்டோ அழகியும் சினிமாவில் ஸ்டார் ஆகி வரும் நிலையில், இருவரையும் அந்த படத்தில் ஜோடியாக நடிக்க வைத்தால் ரசிகர்கள் அந்த படத்தை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என்பதால், அந்த நடிகையிடமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











