உச்ச நடிகர் படம் டப்பிங் படமா? எல்லாம் வடநாட்டில் மார்க்கெட் ஏத்த போட்ட திட்டமாம்!
சென்னை: உச்ச நடிகர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள அந்த பிரம்மாண்ட படம் நேரடி தமிழ் படம் இல்லையென்றும் டப்பிங் படம் தான் என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பாலிவுட்டில் உச்ச நடிகரின் மார்க்கெட்டை உயர்த்தி காட்டுகிறேன் என அந்த நோலன் இயக்குநர் ஆசைக்காட்டி முழுக்க முழுக்க அந்த சாயலிலேயே படத்தை எடுத்துள்ளாராம்.
படத்தை வாங்குவதற்காக படம் பார்த்த விநியோகஸ்தர்கள் என்னடா இது டப்பிங் படம் மாதிரி இருக்கு என தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.

காப்பி கேட்
ஹாலிவுட் படத்தை காப்பியடித்து தமிழில் எடுத்து ஹிட் கொடுத்த அந்த நோலன் இயக்குநர், அதே படத்தை பாலிவுட் உச்ச நடிகரை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அதுமட்டுமின்றி அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆஃபிஸ் ஆசை
இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாம்ராஜ்யத்தை உங்களால் படைக்க முடியும் என்ற ஆசை வார்த்தைகளை காட்டியே இந்த படத்தின் கதையை உச்ச நடிகருக்கு அந்த நோலன் இயக்குநர் கூறியுள்ளார். மேலும், இந்த படம் வடமாநிலங்களில் மிகப்பெரிய வசூல் சாதனையையும் வடமாநிலங்களில் உங்கள் மார்க்கெட்டையும் அதிகரிக்கும் என்ற ஆசையையும் காட்டியுள்ளாராம்.

டப்பிங் படம்
இங்கே உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படியும் இங்கே படம் ஹிட் ஆகி விடும். அதனால், இது டப்பிங் படம் என்பது தெரியாது என்ற பலே திட்டத்தையும் அந்த நோலன் இயக்குநர் போட்டுள்ளார். சமீபத்தில் ரிலீசான படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எல்லாமே வடமாநில சாயலில் இருப்பதற்கு காரணமும் அதுதான்.

திடீர் மார்க்கெட்டிங்
ஆரம்பத்தில் இருந்து இங்கே மார்க்கெட்டிங்கை கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு தென்னிந்தியாவில் வரவேற்பு குறைந்துள்ளதை கடைசி நேரத்தில் கண்டுபிடித்துள்ளது. இதற்கு காரணம், டப்பிங் படம் என்ற உண்மையை அரசல் புரசலாக கசிந்தது தான் காரணமாம்.

இஷ்டத்துக்கு
இதனால், கடைசி நேரத்தில் இஷ்டத்துக்கு விளம்பரம் செய்ய அந்த தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. எப்படியாவது இந்த படம் நேரடி படம் தான் என்பதை ரசிகர்கள் மத்தியில் திணித்து கல்லா கட்ட பிளான் போட்டு வருகிறது.

பத்து நாள் வசூல்
விடுமுறை தினங்களில் பெரிய எதிர்ப்புகள் இன்றி வெளியாகும் அந்த பிரம்மாண்ட படம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் வசூல் செய்தாலே பல நூறு கோடிகளை அள்ளி விடலாம் என்ற மனக்கோட்டையை கட்டி அதன் தயாரிப்பு நிறுவனம் இத்தனை வேலைகளையும் செய்து வருகிறது.

ஒர்க்கவுட் ஆகுமா?
இவர்கள் போடும் திட்டம் இங்கே ஒர்க்கவுட் ஆகுமா? என்பது சந்தேகம் தான். படம் கொஞ்சம் நல்லா இல்லையென்றால் கூட அது யார் நடித்திருந்தாலும், ஓடாது. படம் ஓரளவுக்கு ரசிக்கும் படியாக இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த வசூலை வாரிக் குவிக்கும் என்ற கருத்துக்களும் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











