ரகசிய ரிலேஷன்ஷிப்..போட்டோவால் மாட்டிய 'பிரைம் டைம்' ஜோடி.. ஹீரோவை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை!

சென்னை: சினிமா ஆனாலும், சீரியல் ஆனாலும் இந்த கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அதிலும் குறிப்பாக, ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வரும் ரீல் ஜோடிகள் நிஜத்திலும் ஜோடி சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? அப்படித்தான், ஒரு டாப் தொலைக்காட்சியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் ஜோடி, தற்போது தங்களின் ரகசியக் காதலால் சின்னத்திரை வட்டாரத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

எதார்த்த நடிப்பு: அந்தப் பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அந்தத் தொடருக்கும், அதில் ஜோடியாக நடித்து வரும் அந்த இளம் நடிகர் மற்றும் நடிகைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இவர்களின் ரொமான்ஸ் மற்றும் எதார்த்தமான நடிப்புக்காகவே இந்தச் சீரியலுக்கு என்று ஒரு தனிப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. சீரியலில் மட்டுமல்லாமல், ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் எடுக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களில் இருவருமே எப்போதுமே எல்லை கடந்த நெருக்கத்தைக் காட்டி வந்தனர். இதைப் பார்க்கும் சக நடிகர்கள், என்னப்பா... சீரியலைத் தாண்டி ஏதோ விவகாரமா இருக்கே? என்று கிண்டிவிட்டுக் கேட்டால், அட போங்கப்பா... நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான் என்று கூலாகச் சொல்லிச் சமாளித்து வந்தனர்.

Gossip Television Gossip

ரகசிய டேட்டிங்: இப்படி இருக்கையில், சமீபத்தில் படப்பிடிப்பு இல்லாத ஒரு நாளில், இந்த நல்ல நண்பர்கள் ஜோடி யாருக்கும் தெரியாமல் ஒரு பிரைம் லொகேஷனுக்கு ரகசியமாகத் தனிமையில் டேட்டிங் சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஜாலியாக நேரத்தைச் செலவழித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். அதில், ஒரு ட்விஸ்ட்டாக, அந்தத் தந்திரமான ஹீரோயின் மட்டும், தான் அங்கே எடுத்த புகைப்படங்களை உடனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், நான் என் குடும்பத்தோடு டூர் வந்தேன் என்று ஒரு கேப்ஷனைப் போட்டு, செம்மையாக நாடகமாடி மழுப்பியுள்ளார். அப்பாடா... தப்பிச்சோம் என்று அவர் நினைத்திருக்க, வினையே அந்த ரொமான்டிக் ஹீரோ ரூபத்தில் தான் வந்துள்ளது.

சினிமா கிசு கிசு: அந்த ஹீரோ, தான் அங்கே எடுத்த புகைப்படங்களை உடனே போடாமல், பல மாதங்கள் கழித்து லேட்டாகத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், விபரம் தெரிந்த சக நடிகர்களும், நெட்டிசன்களும் சும்மா இருப்பார்களா? ஹீரோயின் போட்ட பழைய போட்டோவையும், ஹீரோ போட்ட லேட்டஸ்ட் போட்டோவையும் ஒப்பிட்டுப் பார்த்து பேக்கிரவுண்டில் இருக்கும் அதே ஹோட்டல், அதே லொகேஷன், அதே வியூ என எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகக் கண்டுபிடித்தனர். அப்போ ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் போயிருக்கீங்க... ஃபேமிலி டூர்னு பொய் சொன்னீங்களா? என்று கிசுகிசுவை கிளப்பி விட்டுள்ளனர்.

வெடித்த மோதல்': இந்தக் கிசுகிசு விவகாரம் காட்டுத்தீயாய் பரவி, அந்த ஹீரோயினின் காதுக்கும் சென்றுள்ளது. இதனால் செம்ம கடுப்பான ஹீரோயின், உடனடியாக அந்த ஹீரோவைத் தனியா அழைத்து, எதுக்கு இப்போ அந்தப் போட்டோவை போட்ட? உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? என்று கண்ணாபின்னாவென்று திட்டித் தீர்த்துள்ளார். அதோடு நிறுத்தாமல், நம்ம உறவு ரகசியமாகத்தான் இருக்க வேண்டும். இது வெளியில் தெரிந்தால் என் இமேஜ் கெட்டுவிடும், அப்புறம் சீரியலில் எனக்கு நல்ல வாய்ப்புகள் வராது என்று கறாராகக் கூறியுள்ளார். காதலியை உருகி உருகி நேசித்த அந்த ரொமான்டிக் ஹீரோவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. உனக்கு என்னை விட உன்னோட கேரியரும், சினிமா வாய்ப்பும்தான் முக்கியமா? என் காதல் உனக்கு ஒரு பொருட்டே இல்லையா? என்று அவரும் ஆக்ரோஷமாக எகிற, தற்போது அந்தச் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்களுக்குள் ஒரு பனிப்போரே ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X