கைவிட்ட காதலன்.. மொத்த சொத்தையும் அபகரித்த கணவன்.. கடைசி காலத்தில் நடுத்தெருவில் தவித்த நடிகை!
சென்னை: அழகான அந்த கண்களை கொண்ட அந்த நடிகைக்கு சினிமாவிற்கு வந்த புதிதிலேயே இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் காதல் வலை வீசினார்கள். ஆனால், யாருடைய காதலிலும் சிக்காத அந்த நடிகை, ஒரு நடிகரை உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் கைகூடாததால், விரக்தியில் இருந்த அந்த நடிகை கடைசியில் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டார்.
கதாநாயகி, தங்கை, அம்மா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்பதால், அவருக்கு தொடர்ந்து படவாய்ப்பு வீடு தேடி வந்தன. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். எத்தனை பேருடன் நடித்தாலும், காதல் என்பது ஒருவர் மீது, ஏதோ ஒரு காரணத்திற்காக வந்துவிடும் அப்படித்தான் இந்த நடிகைக்கு, அந்த ஹேண்ட்சம் ஹீரோ மீது காதல் வந்தது.

ஹேண்ட்சம் ஹீரோ மீது காதல்: அந்த ஹீரோ அழகில் மட்டும் ஹேண்ட்சம் இல்லை, நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் புகுந்து விளையாடியதால், இந்த கண்ணழகி நடிகைக்கு அவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒன்றாக சுற்றித்திரிந்ததால், சினிமா வட்டாரத்தில் எந்த பக்கம் திரும்பினாலும், இவர்களின் காதல் கதை தான் ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், இவர்களின் காதல் விவகாரம் நடிகையின் பெற்றோருக்கு தெரியவர, குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வர, அந்த ஹேண்ட்சம் ஹீரோ இந்த பஞ்சாயத்து எல்லாம் எனக்கு செட் ஆகாதுப்பா என, கண்ணழகி நடிகைக்கு குட்பை சொல்லி விட்டார். குட்பை சொன்ன கையோடு, வேறு ஒரு பாலிவுட் நடிகையின் காதலுக்கு ஓகே சொல்லி அவரை திருமணமும் செய்து கொண்டார்.
சொத்தை ஆட்டையை போட்ட கணவன்: உருகி உருகி காதலித்த காதலன் கழட்டிவிட்டதால், மன விரக்தியில் இருந்த நடிகை, பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி இருந்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் அவர் விரும்பியபடி அமையவில்லை. தொழில் அதிபர் என்று கூறிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைக்கு, நடிகையின் சொத்தின் மீது கண் இருந்ததால், மொத்த சொத்தையும் ஆட்டையை போட்டு, அதில் குடியும் குடித்தனமுமாக ஜாலியாக இருந்துள்ளார்.
நடிகையுடன் இருந்த சில வருடத்திலேயே அவரை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டார். இதனால், மன வேதனை அடைந்த அந்த கண்ணழகி நடிகை அவரைவிட்டு, பிரிந்து மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், கடைசியாக யாருடைய ஆதரவும் இல்லாமல் புற்றுநோயால் உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











