»   »  சத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை

சத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த இசையமைப்பாளருக்கும், தனக்கும் இடையே நெருக்கம் எல்லாம் இல்லை என்று சத்தியம் செய்கிறாராம் கன்னக்குழி நடிகை.

கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் நல்ல பெயர் எடுத்துள்ளார். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபடுகிறது.

இந்த காதல் விவகாரத்தால் நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள். ஒப்பந்தம் செய்த பிறகு நடிகை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் படம் பாதிக்குமே என்று இயக்குனர்கள் பயப்படுகிறார்கள்.

இந்த காரணத்தால் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது இல்லை. வாய்ப்பு வராததன் காரணத்தை அறிந்த நடிகை கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தனக்கும், அந்த இசையமைப்பாளருக்கும் இடையே எந்த நெருக்கமும் இல்லை என்று சத்தியம் செய்கிறாராம் அம்மணி.

English summary
A young actress is reportedly promising people that there is nothing between her and a particular music director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X