பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!

By Shankar

தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகளில் இன்று பிரதானமாக இடம்பெற்றிருப்பது நடிகை ரீமா சென்னின் படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான்.

என்ன இது... என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இந்த விளம்பரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

ஆனால் இவை தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. ரீமா சென் முன்பு நடித்த 'இடி ஸ்ரீகந்தா' என்ற வங்க மொழிப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி என்ற பிறகு படுக்கையறைக் காட்சி இல்லாமலா... தாராளக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். 2004-ல் வெளியான இந்தப் படத்தை இப்போது தமிழில் இளவரசி என டப் செய்து வெளியிடுகின்றனர்.

இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, "இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ நான் முழு நீள செக்ஸ் படத்தில் நடித்தது போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது செக்ஸ் படமல்ல. நல்ல கலைப் படம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X