»   »  ஏத்தப் போகும் இலியானா

ஏத்தப் போகும் இலியானா

Subscribe to Oneindia Tamil

தன்னோட சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தப் போகிறாராம் இலியானா. இப்பவே புக் பண்ணிட்டா நல்லது,லேட்டான ரேட் இன்னும் கூடிப் போகும் என இலியானாவின் மம்மி தயாரிப்பாளர்கள் மத்தியில் கிலிஅலைகளை பரப்பி வருகிறாராம்.

தெலுங்கில் திரிஷாவுக்கு கடும் போட்டியாக இருப்பவர் இலியானா. இடி இடுப்பழகியான இலியானாவுக்குஅங்கு கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதால் அதை செமையாக அறுவடை செய்து வருகிறார்களாம் இலியும்,அவருடைய மம்மியும்.

சமீபத்தில் இலியானா நடித்த ராக்கி படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலியானாவின் சம்பளத்தை 1கோடியாக அவருடைய அம்மா நிர்ணயித்துள்ளாராம்.

இதை தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பரப்ப ஆரம்பித்து விட்டாராம். சட்டுப்புட்டுன்னு இப்பவே புக்பண்ணீட்டிங்கன்னா நல்லது. இல்லாட்டி ரேட் இன்னும் கூடி விடும் என்றும் கூடவே ஒரு பன்ச் வைத்து செய்திபரப்பி வருகிறாாம் மம்மி.

படு வேகத்தில் இலியானாவின் சம்பளம் ஏறுமுகத்தில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் கிலியாகியுள்ளனராம்.இருந்தாலும் இலியாவின் சிம்பிள் இடுப்பசைவுக்கே ரசிகர்கள் சொக்கிப் போய் விடுவதால் இலியானா படத்தில்இருந்தால் நல்ல அறுவடை கிடைக்கும் என்பதால் சம்பள உயர்வு தயாரிப்பாளர்களை பெரிதாக அசைத்து விடவில்லையாம்.

இதனால் வழக்கம் போலவே இலியானாவை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தரப்பில் போட்டி நிலவுகிறதாம்.இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று இலியும், அம்மாவும் பெத்த பெட்டியோடு வருபவர்களை உள்ளேஅழைத்து உபசரித்து பொட்டியை வாங்கிக் கொண்டு போய்ட்டு வாங்க என்று புன்முறுவலோடு அனுப்பி வைத்துவருகிறார்களாம்.

இலியின் எழுச்சி படு வேகமாக இருப்பதால் திரிஷா கிலியடித்துப் போய்க் கிடக்கிறாராம். இதனால் சம்பளத்தைக்குறைத்து சான்ஸுகளைப் பிடிக்கலாமா என தனது மம்மியுடன் தீவிர டிஸ்கஷனில் இறங்கியிருக்கிறாராம்.

ஆனால் இவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கே உரிய பாணியில் வாய்ப்புகளை அள்ளி அடுக்கிவருகிறாராம் நயனதாரா.

இலி போகும் வேகத்தைப் பார்த்தால் கோலிவுட் பக்கம் அவர் வரவே மாட்டார் போலத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil