பெரிய பிளானுடன் வாரிசு நடிகரை கைக்குள் போட்டுக் கொண்ட இன்ஃபுளியன்சர்.. புளியங்கொம்பா புடிச்சுட்டாங்க
சென்னை: சினிமாவுல மார்க்கெட்டை தக்க வச்சுக்கிறதை விட, சோஷியல் மீடியாவுல ஒருத்தரோட மைண்ட்டை 'ஹேக்' பண்ணி கைக்குள்ள வச்சுக்கிறதுதான் இப்போதைய டிரெண்ட் போல. தென்னிந்திய திரையுலகில் முன்னணி வாரிசு நடிகராக வலம் வரும் அந்த ஹீரோதான் இப்போ ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகில் ஹாட் டாபிக். இத்தனை நாளா அம்மாவின் செல்லப் பிள்ளையாக, குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நடிகர், இப்போ ஒரு சோஷியல் மீடியா இன்ஃபுளியன்சரின் (Influencer) விரல் அசைவிற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் தற்போதைய கிசுகிசு.
திரையுலகில் பெரிய பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், நடிகருக்கு எப்போதுமே ஒரு தனி கெத்து உண்டு. ஆனால், சமீபகாலமாக அவரிடம் ஒரு பெரும் மாற்றம் தெரிந்தது. அதற்குப் பின்னணியில் இருப்பது, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளும் ஒரு இளம் அழகிதான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
மாஸ்டர் பிளான் போட்ட அழகி: ஆரம்பத்தில் நடிகரின் படங்களுக்கு பிரமோஷன் செய்யும் சாக்கில் நெருங்கிய அந்த இன்ஃபுளியன்சர், சாதாரண ஆள் இல்லையாம். நடிகரை எப்படி தன் வசப்படுத்த வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டுத்தான் உள்ளே நுழைந்திருக்கிறார். நடிகரின் பலகீனங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் பேசி மயக்கியுள்ளார். தன்னுடைய கவர்ச்சியான பேச்சாலும், பளபளப்பான ஸ்டைலாலும் நடிகரின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கமே திருப்பியுள்ளார். நடிகரின் நட்பு வட்டாரத்தை மெல்ல மெல்ல சுருக்கி, "உங்களுக்கு நான்தான் எல்லாமே" என்கிற பிம்பத்தை உருவாக்கியுள்ளார் என்ற பேச்சுக்களும் ஓடிக் கொண்டு உள்ளது.

புளியங்கொம்பும்.. கோடிக் கணக்கான முதலீடும்: நடிகர் இப்போ அந்தப் பெண்ணின் மாய வலையில் முழுமையாக சிக்கிவிட்டார். அந்த இன்ஃபுளியன்சர் காட்டிய க்ரீன் சிக்னலை நம்பி, சினிமா தயாரிப்பு, சொகுசு உணவகங்கள் என புதிய முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
கோடிகளுக்கு அதிபதி: "அவர் சினிமா வாரிசு மட்டுமில்ல, பல நூறு கோடிகளுக்கு அதிபதி. அவரை பிடிச்சா லைஃப் டைம்க்கும் செட்டில் ஆகிடலாம்" என அந்த இன்ஃபுளியன்சர் ஆரம்பத்திலேயே கணக்கு போட்டுத்தான் காய் நகர்த்தியதாக நெட்டிசன்கள் கிசுகிசுக்கிறார்கள். இப்போது நடிகரின் கால்ஷீட், படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது முதல் அவருடைய தினசரி அஜெண்டா வரை அனைத்தையும் அந்தப் பெண்தான் தீர்மானிக்கிறாராம். நடிகரின் குடும்பத்தினர் எவ்வளவோ எச்சரித்தும், நடிகர் எதையும் காதில் வாங்கும் மனநிலையில் இல்லையாம். சினிமா வட்டாரத்திலோ, "அந்தப் பொண்ணு சாதாரண ஆள் இல்லைப்பா.. பெரிய பிளான் போட்டு வாரிசு நடிகரை கைக்குள்ள போட்டுக்கிட்டு, கரெக்டா புளியங்கொம்பா புடிச்சுட்டாங்க!" என வாயடைத்துப் போய் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications