Don't Miss!
- Sports
அடடே..!! தோல்விக்கு சூப்பர் காரணம் சொன்ன சஞ்சு சாம்சன்.. மீண்டு வருவோம் என நம்பிக்கை.. ஐபிஎல் டமாஷ்
- News
வீடியோவை பார்த்தீங்களா.. கனிமொழி படிச்சு படிச்சு சொன்னாங்களே? ஸ்டாலினும் விடலையே! ப்ச் இப்ப பாருங்க
- Technology
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கனவை நோக்கிய பயணத்தில் ஒல்லி நடிகர்.. அப்போ அண்ணனின் கனவு படத்துக்கு அல்வா தான் போல!
சென்னை: ஒல்லி நடிகர் தமிழ் சினிமாவிலேயே அரை டஜன் படங்களை அடுக்கி வைத்திருந்த நிலையில், தற்போது பிற மொழி படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருவது அண்ணனை வருத்தமடைய செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இங்கே கொடுப்பதை விட பல மடங்கு சம்பளம் கிடைப்பதால் தனது மார்க்கெட்டை உயர்த்த நடிகரும் முடிவு செய்து விட்டார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அடுத்தடுத்து பிற மொழி படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க ஒல்லி நடிகர் முடிவு செய்துள்ள நிலையில், அண்ணனின் கனவு படத்துக்கு அல்வா தான் போல என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கமல்ஹாசன்
சார்
தான்
என்னுடைய
ரோல்
மாடல்..நடிகர்
அசோக்செல்வன்
நெகிழ்ச்சி!

அண்ணனுக்கு சான்ஸ்
தம்பிக்கு ஏணியாக அண்ணன் இருந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. தற்போது அண்ணனை காப்பாற்றும் தோணியாக தம்பி மாறுவார் என அண்ணன் பெரும் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். பல வருடங்களாக அவரும் கேட்டு வருகிறாரே என இரு படங்களில் நடிக்க ஓகே சொல்லி இருந்தார் அன்புத் தம்பி.

கனவு பட அறிவிப்பு
தம்பி சம்மதம் சொல்லிட்டாரே என அடுத்தடுத்து இரு படங்களின் அறிவிப்புகளையும் அண்ணன் இயக்குநர் அறிவித்து விட்டார். அதில், அவரது கனவு படம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் ரசிகர்களும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் செய்தியை கேட்கவே பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

திடீர் மனமாற்றம்
ஆனால், தம்பிக்கு திடீரென கோலிவுட் படங்களை விட பிற மொழி படங்களில் அதீத ஈடுபாடுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கனவு பயணத்திற்காக சமீபத்தில் மிகப்பெரிய தியாகத்தையே செய்ய ஒல்லி நடிகர் முன் வந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில், அண்ணன் இதயத்தில் தான் பெரிய இடியே இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

அல்வா தான் போல
ஏற்கனவே ஆரம்பித்த படத்தையே தம்பி எப்போது முடித்துக் கொடுப்பார் என தெரியாமல் புலம்பித் தவிக்கும் அண்ணன் தற்போது பிற மொழி படங்களில் அதிக வருமானம் வருவதால் கால்ஷீட்களை வாரி வழங்கி வருவதால் அந்த கனவு படத்தை அப்படியே கை விட்டு விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

ஆல் ரவுண்டர்
ஆனால், ஒல்லி நடிகர் தான் கமீட் பண்ண எதையும் விட்டு விட மாட்டார் என்றும் அவர் பிற மொழிகளில் பிசியானாலும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பார் என்றும் ஆல்ரவுண்டராக செயல்பட்டு அண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் கூறுகின்றனர். என்ன நடக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.