»   »  தீபிகாவிடம் வீழ்ந்த டோணி!

தீபிகாவிடம் வீழ்ந்த டோணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil


இந்தித் திரையுலகின் புதிய புயல் தீபிகா படுகோனுக்கும், இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கும் டீப்பான நட்பு அரும்பியிருப்பதாக பரபரப்பு கிசுகிசு கிளம்பியுள்ளது.

Click here for more images

தீபிகா படுகோன், பாலிவுட்டின் புதுப் புயல். இளமைத் துடிப்புடன் இருக்கும் தீபிகாவின் அப்பா பிரகாஷ் படுகோன், முன்னாள் பேட்மிண்டன் சாம்பியன்.

தந்தையின் வழியில் பேட்மிண்டன் ஆடப் போகாமல், மாடலிங் பக்கம் பார்வையைத் திருப்பினார் தீபிகா. அவரது இளமைத் துடிப்பான உடல்வாகால் படுவேகமாக முன்னணி மாடலாக மாறினார் தீபிகா.

இந்த நிலையில் கன்னட சினிமாவில் அவரை நடிக்கக் கூப்பிட்டனர். சில பல யோசனைகளுக்குப் பின் ஐஸ்வர்யா என்ற அந்தப் படத்தில் நடித்தார் தீபிகா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியிலிருந்து ஓலை வந்தது தீபிகாவுக்கு. அதுவும் ஷாருக்கானுடன், ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க. வந்த வாய்ப்பை விடாமல் ஷாருக்குடன் ஜோடி போட்டு தீபிகா அசத்தியுள்ள அந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஆனால் படம் வருவதற்கு முன்பாகவே படம் குறித்தும், தீபிகா குறித்தும் பாலிவுட்டில் படு ஹாட்டாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தீபிகாவின் மயக்கும் அழகால் அவரைத் தேடி பல படங்கள் தேடி ஓடி வருகின்றன. ஆனால் தீபிகா 2 படங்களை மட்டும் தேர்வு செய்து ஓகே. சொல்லி வைத்துள்ளாராம்.

இந்த நிலையில், தீபிகா கிசுகிசு வலையில் சிக்கியுள்ளார். அவருக்கும், கேப்டன் டோணிக்கும் டீப்பான நட்பு பூத்துள்ளதாம், காதலை நோக்கி இது போய்க் கொண்டிருக்கிறதாம்.

டோணி மீது தீபிகாவும், தீபிகா மீது டோணியும் படு பாசமாக இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. சமீபத்தில் நடந்த 20-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா ஆடிய அத்தனை போட்டிகளையும் கொட்டக் கொட்ட உட்கார்ந்து பார்த்து ரசித்தாராம் தீபிகா.

இந்த நிலையில் இன்று மும்பையில் நடக்கும் 20-20 போட்டியைக் காண வருமாறு தீபிகாவுக்கு, டோணி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளாராம். அதைக் கேட்டுப் பூரிப்பாகிய தீபிகா, எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு கிரிக்கெட் பார்க்க ஆயத்தமாகியுள்ளார்.

இன்று கிரிக்கெட் மட்டும்தான். வேறு எந்த நிகழ்ச்சியும் கிடையாது என்று கூறி வருகிறாராம் தீபிகா.

ஏற்கனவே நக்மா பின்னால் போனார் கங்குலி. அவரகு கேரியருக்கு அதன் பிறகு சங்கு ஊதப்பட்டது. இப்போது தீபிகா பின்னர் டோணி கிளம்பியிருப்பதாக புதுச் செய்தி வந்துள்ளது. போணி ஆகாமல் போயிடாம பார்த்துக்குங்க டோணி!

Read more about: dhoni eepika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil