அந்த ஹீரோயினுக்கும் கணவர் குடும்பத்துக்கும் சிக்கலாம்! நடிகை மவுனத்துக்கு இதுதான் காரணமாமே?
சென்னை: பிரபல ஹீரோயினுக்கும் அவரது காதல் கணவர் வீட்டுக்கும் பிரச்னை என்று சொல்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார், அந்த ஹீரோயின். இரண்டு மொழி படங்களிலும் சமமாக நடித்து வருகிறார்.
விவாகரத்தான தமிழ் ஹீரோவை காதலித்து வந்தார். திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு.

திருமணம்
அந்த ஹீரோவை அப்படியே கழற்றி விட்டுவிட்டு, தெலுங்கு ஹீரோவை காதலிக்கத் தொடங்கினார், ஹீரோயின். அந்த ஹீரோ பெரிய இடத்துப்பிள்ளை. சில வருடக் காதல் இன்னும் அதிகரித்தது. குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்ட, இருவீட்டு சம்மதத்துடனும் திருமணத்தில் முடிந்தது, காதல். பிரமாண்டமாக 3 நாட்கள் நடந்த திருமணத்தில் திரையுலகினர்ர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திடீர் அமைதி
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார், ஹீரோயின். இந்நிலையில் நடிகை திடீரென அமைதியாகி விட்டார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார். வழக்கமாக குடும்ப உறுப்பினர்களின் பர்த் டே என்றால் முதல் ஆளாக வாழ்த்தும் நடிகை, இப்போது அப்படி செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

ஆச்சரியம்
நடிகையின் காதல் கணவருடைய தம்பிக்கு சமீபத்தில் பர்த் டே. அவரும் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு பல வழிகளில் உதவி வந்தவர், இந்த நடிகை. அதனால், எப்போதும் அவர் பர்த் டேவுக்கு முதல் ஆளாக வாழ்த்தி ட்வீட் போடும் நடிகை, இப்போது அப்படி செய்யவில்லை. இது ஏன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

அதிகரிக்கும் சந்தேகம்
இதையடுத்துதான் நடிகைக்கும் அவரது கணவர் குடும்பத்துக்கும் சுமூக உறவு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். ஊரடங்கு உத்தவரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய ஏராளமானோர் முன் வந்துள்ள நிலையில், நடிகை அமைதி காப்பதும், சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது என்கிறார்கள். என்னன்னு தெரியலயே?


Click it and Unblock the Notifications











