அடுத்த சிக்கல்.. இனி அங்கே வாய்ப்பே இல்லை.. மறைமுகமாக மனைவிக்கு செக் வைத்தாரா கணவன்?

By Staff

சென்னை: விவாகரத்து அறிவிப்பு வெளியான நிலையில், இனிமேல் கணவன் கொடி கட்டி பறக்கும் இடத்தில் மனைவி நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு நட்சத்திரங்களும் திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மனைவியை பிரிந்த நிலையில், கணவன் நடிகர் எந்த கவலையும் இல்லாமல் இருக்க மனைவி நடிகையோ அனுதினமும் கணவர் நினைவால் வாடி ஏதாவது ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மனதை ஆற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

யார் மீது தப்பு

யார் மீது தப்பு

திடீரென பிரபல நட்சத்திர தம்பதிகள் இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், நடிகை மீது தான் மொத்த குற்றமும் உள்ளதாக ஏகப்பட்ட வதந்திகள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்தது. நடிகர் தான் காரணம் என்றும் சிலர் கூறி வந்தனர். யார் மீது தப்பு இருந்தால் என்ன? அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதில் மற்றவர்கள் யாரும் தலையிட தேவையில்லை என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

நடிகைக்கு கஷ்டம்

நடிகைக்கு கஷ்டம்

காதலித்த கணவரை பிரிவதை கொஞ்சம் கூட நடிகை விரும்பவில்லை என்றும் கணவரை பிரிந்ததை ஏற்க முடியாமல் தான் ஆன்மிக சுற்றுலா உள்ளிட்டவற்றை நடிகை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் பற்றி நடிகர் அதிகமாக பேசுவது இல்லை என்றும் நடிகை தான் தொடர்ந்து புலம்பி வருகிறார் என அவரது சமூக வலைதள பதிவுகளை குறிப்பிட்டு சுட்டிக் காட்டி வருகின்றனர்.

பிளாக் லிஸ்ட்

பிளாக் லிஸ்ட்

பக்கத்து மாநிலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அந்த நடிகைக்கு இனி அங்கே சினிமா வாய்ப்புகள் முன்பு போல கிடைக்காது என்றும், ஏற்கனவே விவாகரத்தான நடிகை ஒருவரும் இதே போன்ற பிரச்சனையை சந்தித்து வருகிறார் என்றும் மறைமுகமாக கணவரே இந்த காரியத்தை செய்து வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

ரிலீஸ் பிரச்சனை வரும்

ரிலீஸ் பிரச்சனை வரும்

மேலும், ஏற்கனவே நடிகை நடித்துள்ள அந்த பிரம்மாண்ட படத்தை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் ஏற்படுத்த திட்டம் தீட்டி உள்ளதாகவும் வதந்திகள் வலம் வரத் தொடங்கி உள்ளன. பிரபல நடிகரின் மகள் அந்த படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ள நிலையில், ரிலீஸ் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் முன்பை போல படங்கள் கிடைப்பதில் நிச்சயம் தடை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மற்ற மொழிகளில் கவனம்

மற்ற மொழிகளில் கவனம்

நடிகைக்கும் அந்த விஷயம் நன்றாக புரியும் என்றும் அதை மனதில் வைத்துக் கொண்டே கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கால் பதிக்க சரியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கோலிவுட்டில் அந்த நடிகைக்கு சமீபத்தில் உருவான சிக்கலையும் சரி செய்யும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X