மூன்று மணி நேரம் உட்கார முடியுமா? ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்!

பண்டிகை நாளன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ள அந்த விளையாட்டு படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ரசிகர்களை அது என்கேஜ் பண்ணுமா என அந்த ஹீரோ கேட்டுள்ளாராம்.

சென்னை: தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவின் படம் அந்த பெரிய பண்டிகை நாளன்று வெளியாகுமா இல்லையா என்ற நிலையில் சட்ட சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை தனது ரசிகர்களை தியேட்டரில் என்கேஜாக உட்கார வைக்க முடியுமா என அந்த மூன்று எழுத்து இயக்குநரிடம் ஹீரோ கேட்க, என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் அந்த இயக்குநர்.

Is it possible to engage my audience for three hours, hero asked to the director?

அந்த இயக்குநர் இதுவரை எடுத்த படங்கள் காப்பி கதைகள் என்ற பட்டம் வாங்கியுள்ள நிலையில், இந்த படமும் பிரபல பாலிவுட் படம் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இது அந்த பாலிவுட் படத்தை தழுவி எடுக்கவில்லை என சாதித்து வருகின்றனர்.

படத்தின் கதை தனது என்று தற்போது புதிதாக ஒருவரும் கிளம்பியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கை விரைவில் முடித்துவிட்டு, பண்டிகை தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிரைலரிலேயே பல்லிளித்துள்ள நிலையில், படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருப்பதால், படம் வெளியான பிறகு, 20 நிமிட காட்சிகள் வரை வெட்ட நேரிடலாம் என்ற பயமும் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

பாடல்கள் இடத்தை பெரிதாக அடைக்கவில்லை என்றாலும், தேவையில்லாத பில்டப் ஷாட்டுகள், படம் நெடுகிலும் இருப்பதாகவும், அதனை இன்னமும் கருணை காட்டாமல் எடிட் செய்தால், ரசிகர்கள் அடிக்கடி இன்டெர்வெல் எடுக்காமல் தியேட்டரில் உட்காருவார்கள் என அந்த ஹீரோவுக்கு நெருங்கியவர்கள் காது கடிக்க, இயக்குநரிடம் இந்த கேள்வியை அந்த மாஸ் ஹீரோ கேட்டுள்ளாராம்.

சிஜி பணிகளில் உள்ள ஓட்டைகளை ஒட்ட வைத்து வரும் இயக்குநர், தணிக்கை சான்றிதழ் கிடைத்த பின்னர், நாயகனிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி எழுந்துள்ளதால், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X