»   »  தளபதி படம்: கதை மட்டும் தான்னு பார்த்தா தலைப்புமா பாஸு?

தளபதி படம்: கதை மட்டும் தான்னு பார்த்தா தலைப்புமா பாஸு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி நடிகர் நடித்து வரும் படத்திற்கு உச்ச நடிகரின் படத்தின் தலைப்பை வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

தளபதி நடிகர் ஒல்லிக்குச்சி இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் உச்ச நடிகரின் ஹிட் படம் ஒன்றை மனதில் வைத்து எடுக்கப்படுவதாக படப்பிடிப்பு துவங்கியதுமே செய்திகள் வெளியாகின.

படத்தில் தளபதி அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று வேடங்களில் நடித்து வருகிறாராம். இதனால் படத்திற்கு உச்ச நடிகர் அப்பா, 2 மகன்களாக நடித்த படத்தின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஏற்கனவே படத்தின் கதை சுடப்பட்டது என்று கூறப்படும் நிலையில் தலைப்பும் சுடப்படுகிறது என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள். மேலும் தளபதியின் கெட்டப்பையும் வடிவேலுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் உலா வருகின்றன.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாம்.

English summary
Buzz is that Thalapathy's upcoming movie will have style actor's movie name as title.
Please Wait while comments are loading...