புரமோஷனுக்கு ஏன் வேஸ்ட்டா செலவு செய்யணும்.. நம்பர் நடிகை எடுத்த திடீர் முடிவு.. என்ன ஆகப்போகுதோ?
சென்னை: தங்களது பேனரில் இதற்கு முன் வெளியான தனது படத்திற்கு புரமோஷன் பேட்டி எல்லாம் கொடுத்திருந்தார் நம்பர் நடிகை.
ஆனால், அது எதுவுமே படம் வெளியான பின்னர், அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்த முறை படத்தை தைரியமாக தியேட்டரில் வெளியிடும் நேரத்தில் ஏன் புரமோஷன் எதுவுமே நம்பர் நடிகை பண்ணவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

புரமோஷன் வேண்டாம்
நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதால் தான் பெரிய அளவில் கூட இல்லை போட்ட முதல் கூட பிசினஸ் ஆகாத சூழல் உருவாகி வருவதாக பல தயாரிப்பாளர்கள் தலையால் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், இங்கே விஷயமே வேறு.

சொந்த தயாரிப்பு
இயக்குநருக்கும் நடிகைக்கும் இது சொந்த தயாரிப்பு படம் என்பதால் நிச்சயம் பெரிய அளவில் புரமோஷன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இரு பெரும் ஹீரோயின்கள் மற்றும் திறமையான நடிகர் என ஸ்டார் காஸ்ட்டே பயங்கரமாக உள்ள நிலையில், படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்தால், முதல் நாளிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு திரட்டி விடலாம்.

வேஸ்ட் செலவு
இப்போதெல்லாம், படத்தின் அவுட் புட் தெரிந்து விட்டால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து புரமோஷன் செய்வதை அந்த படக் குழுவினரே பக்குவக்கமாக முடிவு எடுத்து மேலும், பணத்தை விரையமாக்க வேண்டாம் என முடிவு செய்து விடுகின்றனர் என நம்பர் நடிகை புரமோஷன் வேண்டாம் என எடுத்த முடிவால் இப்படியொரு பேச்சு கோடம்பாக்கத்தில் கிளம்பி இருக்கிறது.

மாஸ் நடிகர் படத்திற்கு
சமீபத்தில் வெளியான மாஸ் நடிகர் படத்திற்கு விழா நடத்த வேண்டாம் என்கிற முடிவை அரசியல் காரணத்திற்காக எல்லாம் செய்யவில்லை என்றும், படத்தின் அவுட்புட் தெரிந்த பின்னர் தான் அடக்கி வாசித்தார்கள் என்கிற பேச்சுக்களும் தற்போது எழத் தொடங்கி உள்ளன. அதே போலத்தான் இந்த படத்தின் நிலையும் இருக்குமா என்கிற கேள்வியும் கிளம்பி இருக்கிறது.

ரொம்ப லைட்டா
பெரியளவில் செலவு செய்யாமல், லைட்டா சோஷியல் மீடியாவில் மட்டும் நடிகர்களையும், நடிகைகளையும் வைத்து படத்திற்கு லேஸாக பில்டப் செய்தால் போதுமானது என முடிவு எடுத்து விட்டனர் என்றும் கூறுகின்றனர். இந்த படத்திற்காக நம்பர் நடிகை தனிப்பட்ட முறையில் பேட்டிக் கூட கொடுக்கப் போவதில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இணை தயாரிப்பு
இதற்கு காரணம் சொந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் பெயருக்காக மட்டுமே என்றும், இன்னொரு தயாரிப்பு நிறுவனம் தான் மொத்த பணத்தையும் கொட்டி படம் எடுத்து இருக்கிறது என்றும் படத்தை மொத்தமாக பார்த்தவர்கள் எந்த அளவுக்கு இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற குழப்பத்தால் தான் வேறு எந்த செலவையும் செய்யாமல், படத்தை மட்டும் ரிலீஸ் செய்து விடலாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கம்பேக் கிடைக்குமா
புரமோஷன் செய்யவில்லை என்றாலும், அடுத்து டாப் நடிகர் படத்தை இந்த இயக்குநர் இயக்குகிறார் என்கிற அறிவிப்பே படத்திற்கு பெரிய புரமோஷன் தான் என்றும், நம்பர் நடிகைக்கும், நடிகருக்கும் தோல்விகளுக்கு பிறகு ஒரு நல்ல கம்பேக்காக இந்த படம் அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு அனைவர் இடத்திலும் நிறைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications