டிவி நடிகர் இளம் இசையை ஒதுக்க ஒல்லி நடிகர் காரணமா?
சென்னை: டிவி நடிகருக்கும், ஒல்லி இசைக்கும் இடையே பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒல்லி இசை ஒல்லி நடிகருடன் ஒட்டி உறவாடினார். ஒரு கட்டத்தில் ஒல்லி நடிகர் இசையை கழற்றிவிட்டுவிட்டார். இதையடுத்து டிவி நடிகர் ஒல்லி இசையை தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கினார்.
டிவி நடிகர் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகும் படங்களில் எல்லாம் ஒல்லி தான் இசை என்ற நிலை உருவானது.

இசை
தற்போது டிவி நடிகர் நடித்து முடித்துள்ள மற்றும் நடிக்கும் 2 படங்களில் ஒல்லி இசையமைக்கவில்லை. மாறாக மூன்று படங்களிலும் வேறு வேறு இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

நடிகர்
ஒல்லி நடிகரும், ஒல்லி இசையும் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேரும் என்று ஒல்லி இசை அண்மையில் அறிவித்தார்.

பிரிவு
ஒல்லி இசை ஒல்லி நடிகருடன் மீண்டும் கூட்டணி சேர்வதால் தான் டிவி நடிகர் அவரை ஒதுக்கத் துவங்கியுள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒல்லி நடிகருக்கும், டிவி நடிகருக்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே.

இருக்கலாமே?
டிவி நடிகர் ஒல்லி இசையை கழற்றிவிட்டது மாற்றத்தை எதிர்பார்த்து கூட இருக்கலாமே. புதுப் புது கூட்டணி அமைத்து புது முயற்சியில் ஈடுபட அவர் விரும்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











