கோலிவுட்டின் அடுத்த சிம்ரன் வெடுக் வெடுக் இடுப்பழகி தான்டோய்
Recommended Video

சென்னை: தமிழ் திரையுலகில் சிம்ரன் இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு.
நச்சுன்னு நடனமாடவும் தெரியும், அருமையாக நடிக்கவும் தெரியும் என்று பெயர் எடுத்தவர் சிம்ரன். திருமணம், குழந்தைகள் என்று செட்டிலான அவர் தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.
சிம்ரனின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமானதாக அமையவில்லை. ஒரு பிரேக் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்.

நடனம்
வட நாட்டில் இருந்து வந்துள்ள வெடுக் வெடுக் இடுப்பழகி தனது முதல் படத்தில் ஆடிய நடனத்தை பார்த்தே கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எல்லாம் அசந்துவிட்டனர்.

ஹீரோக்கள்
முதல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அதில் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முடித்துள்ளார்.

பாராட்டு
பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மணி நடனம் ஆடுவதில் மட்டும் அல்ல நடிப்பிலும் வல்லவர் என்று பெயர் எடுத்துவிட்டார். அவரின் நடிப்பு திறமையை சீனியர்கள் கூட புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தமிழ்
வட நாட்டில் இருந்து வந்த எத்தனையோ நடிகைகள் பல ஆண்டுகளாக கோலிவுட் படங்களில் நடித்தாலும் தமிழை கற்கவில்லை. ஆனால் இந்த பொண்ணோ வந்த வேகத்தில் தமிழ் கற்றுக் கொண்டுவிட்டது.

அடுத்த சிம்ரன்
நடிக்கவும் தெரிகிறது, நடனமும் நன்றாக வருகிறது. அம்மணி அடுத்த சிம்ரனாக கோலிவுட்டில் ஒரு பெரிய்ய்ய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிச்சல்
என்னமோ இவளுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கிற மாதிரி ஓவராகத் தான் ஆட்டுறா. எங்களுக்கும் டான்ஸ் ஆடத் தெரியும் என்று அம்மணியை பார்த்து பிற நடிகைகள் கடுகடுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











