ஏம்ப்பா இந்த பயப்படாதவன் படம் ஹிட்டா, ஃபிளாப்பா?

By Siva

சென்னை: சிங்கம் நடித்த பயப்படாதவன் படம் ஹிட்டா, ஃபிளாப்பா?

சிங்கம் லிங்கமான இயக்குனரின் பயப்படாதவன் படத்தில் நடித்தார். படத்தின் டீஸருக்கே வெற்றி விழா கொண்டாடினார்கள். இப்படி ஓவர் பில்ட்அப் கொடுத்த பிறகு ரிலீஸானதாலோ என்னவோ படம் ரசிகர்களை கவரவில்லை. மாறாக ரசிகர்கள் படத்தை சமூக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

படம் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ.38 கோடி வசூல் செய்தது. அடுத்த இரண்டு நாட்களில் ரூ.2 கோடி வசூலித்தது என்று செய்திகள் வெளியாகின. அதன் பிறகு வசூல் கணக்கையே காணவில்லை. இந்த படம் ஊத்திக் கொண்டதால் இயக்குனர் கவலையில் உள்ளார் என்று கூறப்பட்டது.

படத்தில் ஹீரோயின் பிகினி அணிந்து வரும் காட்சிக்கே ஏகப்பட்ட செலவாகிவிட்டது என்றார்கள். நடிகரோ அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இப்படி இருக்கையில் படத்தின் வசூலை பற்றி மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவில்லை.

அவர்கள் கூறாவிட்டாலும் ரசிகர்கள் பயப்படாதவன் ஃபிளாப் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X