காதல் கணவரை தூக்கி எறிந்த நடிகை… காரணம் அந்த சர்ச்சைக்குரிய நடிகரா?
சென்னை: ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை விவாகரத்து செய்து விட்டு, சினிமாவில் நடித்தால் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.
90ஸ்களில் க்யூட்டான நடிகையாக இருந்த இவர் இப்போதும், அதே அழகுடன் இருக்கிறார். வடமாநிலத்தில் இவர் பிறந்து இருந்தாலும், அவர் அறிமுகமானது என்னவோ தமிழ் படத்தில் தான். தமிழ் ரசிகர்களுக்கே பிடித்தமான வெள்ளை நிறத்தில் ஒயிட் லகான் கோழிப்போல இருந்ததால், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார். அந்த காலத்தில் செம்ம அழகாக இருந்த அந்த நடிகருடன் சேர்ந்து நடித்து பெயர் எடுத்தார்.

தமிழில் வரிசையாக அடுத்தடுத்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்த இவருக்கு சற்று மார்க்கெட் குறைந்ததும். தெலுங்கு, இந்தி பக்கம் தாவினார். தெலுங்கில் ஒரு சில படத்தில் கமிட்டாகி நடித்து வந்த அந்த க்யூட் நடிகைக்கு அங்கு படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், பாலிவுட் பக்கம் சென்றார். தெலுங்கில் கிடைக்காத வரவேற்பு இந்தியில் கிடைத்தால் அங்கேயே டேராவை போட்டு செட்டில் ஆனார். இதன் பாலிவுட்டில் அடுத்தடுத்த படத்தில் நடித்து படுபிஸியாக இருந்த அந்த நடிகைக்கு தமிழைவிட இந்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
காதல் திருமணம்: தொடர்ந்து படத்தில் நடித்து வந்த இந்த க்யூட் நடிகைக்கு நடிப்பு அலுத்துப்போனதால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்தார். இதையடுத்து தனக்கு தகுந்த ஒருவரை உருகி உருகி காதலித்தார். பொதுவாக நடிகைகள் தொழிலதிபரைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என்பது எழுதப்படாத நியதியாக இருக்கும் போது, இந்த நடிகை மட்டும் விதிவிலக்கா என்ன, இவரும் ஜிம் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தடபுடலாக நடந்த இவர்களின் திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல டாப் நடிகர்கள் கலந்து கொண்டனர்.
நோ சொன்ன: திருமணத்திற்கு பிறகு நடிப்பு முழுக்கு போட்ட நடிகைக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அம்மணிக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளது. தனது ஆசையை கணவனிடம் சொல்ல முதலில் நோ சொன்ன கணவன் நடிகையின் பிடிவாதத்தால், ஓகே சொல்லி இருக்கிறார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகை தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த தமிழ் பக்கம் மீண்டும் வந்து வாய்ப்பு தேடினார். இதையடுத்து, சர்ச்சை நடிகரின் படத்தில் கமிட்டாகி நடித்தார். பெரிய பட்ஜெட்டில் உருவான அந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உருவாகி ஒரு வழியாக படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
கணவரை பிரிந்தார்: செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அந்த நடிகைக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் குவிந்ததால், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டார். தற்போது நடிகை தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறாராம். இவரைப் பற்றி திரையுலகமே பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சினிமா ஆசையில் காணவரை தூக்கி போட்டுவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர். மேலும், அந்த சர்ச்சை நடிகரின் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு இதுதான் நிலைமை என்றும் அவரின் ராசி அப்படி என்று கிண்டலாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications