கணவரை பிரிகிறாரா நம்பர் நடிகை.. தினமும் நடக்கும் பஞ்சாயத்தால் எடுத்த முடிவா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகை, இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அந்த நம்பர் நடிகை, தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவை பார்த்த பலரும் கணவன் மனைவிக்கும் அப்படி என்ன பிரச்சனை என கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அந்த நம்பர் நடிகை, சினிமாவிற்கு வந்ததிலிருந்தே பல கிசுகிசுகளில் சிக்கி சின்னாபின்னமானார். ஒரு கட்டத்தில் சினிமாவே தேவையில்லை என முடிவு எடுத்து, சினிமாவில் தலை காட்டாமல் காதல் தோல்வியால் துவண்டு போயிருந்த நம்பர் நடிகை, மீண்டும் கம்பேக் கொடுத்து திரைப்படங்களில் நடித்தார். அப்போது, புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடித்த போது, அந்த இயக்குனருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவ்விக் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். திருமண நிகழ்ச்சி என்றாலும், சினிமா நிகழ்ச்சி, வெளிநாட்டு டூர் என்றாலும் இருவரும் கைகளை கோர்த்த படி ஜோடி போட்டு சென்றனர்.

காதல் திருமணம்: இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகள் காதல் புறாவாக சுற்றிய அவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கினார். பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே நம்பர் நடிகை இரட்டை குழந்தைக்கு தாய் ஆனார். அதன் பிறகு இணையத்தில் அவ்வப்போது கணவர், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அந்த நம்பர் நடிகை.
கணவரை பிரிகிறாரா?: நம்பர் நடிகைக்கு திருமணமானதில் இருந்தே நேரம் சரியில்லை, திருமணத்திற்கு பின் எந்த படவாய்ப்பும் வரவில்லை, நடித்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதுமட்டுமில்லாமல் நம்பர் நடிகை எது செய்தாலும் அது சிக்கலாகி பஞ்சாயத்தாகி விடுகிறது. படம் பெரிதாக இல்லை என்றாலும், அம்மணி பற்றி தினமும், சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது, நம்பர் நடிகை இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவை ஷேர் செய்து, அவசர அவசரமாக அதை டெலிட்டும் செய்துள்ளார்.
அதாவது, குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப் பெரிய தவறாக மாறும். உங்கள் கணவருடைய செயல்பாடுக்கு நீங்கள் பொறுப்பில்லை. என்னை விட்டு விடுங்கள், நான் ஏராளமான பிரச்சனைகளை உங்களால் அனுபவித்து விட்டேன் என பதிவிட்டுவிட்டு, பின் அதை டெலிட் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நம்பர் நடிகை பதிவிட்டாரா, இல்லை எதாவது விஷமிகள் செய்த வேலையா என்பது தெரியவில்லை. இருந்த போதும், நம்பர் நடிகைக்கு கடந்த சில ஆண்டுகளாக நேரம் சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.


Click it and Unblock the Notifications











