twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்ல இங்கிலீஸ் படம்னாய்ங்க... இப்ப கொரிய படம்ங்கிறாய்ங்க... எதுல இருந்துய்யா சுட்டிருக்காய்ங்க?

    By
    |

    சென்னை: ஆங்கில படங்களை காப்பியடித்து படம் பண்ணுவது தமிழுக்கு ஒன்றும் புதிதில்லை. இது காலங்காலமாக நடக்கிற விஷயம்தான்.

    படத்தை மொத்தமாகச் சுடாமல் கொஞ்சம் சுட்டு, கொஞ்சம் சேர்த்தால், அதை இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்வார்கள்.

    அப்படித்தான் உருவாகிறதாம், தற்போது பர்ஸ்டை லுக்கை வெளியிட்டுள்ள டாப் ஹீரோவின் குரு படமும்.

    கர்நாடகாவில் ஷூட்டிங்

    கர்நாடகாவில் ஷூட்டிங்

    இந்தப் படத்தை இயக்குகிறார் மெகா சிட்டி, பிரிசனர் படங்களின் இயக்குனர்.
    படத்துக்காக கர்நாடகாவில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இதில் தற்போது ஒவர் பிசியில் இருக்கும் அந்த ஹீரோ வில்லனாக நடிக்கிறார்.

    ஆங்கிலப் படம்

    ஆங்கிலப் படம்

    இந்தப் படத்தின் கதையை ஆங்கிலப் படத்தைச் சுட்டு எடுப்பதாக முதலில் கூறப்பட்டது. அதாவது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி குழந்தைகளை பாலியலுக்கு பயன்படுத்தும் கும்பலை பற்றிய கதையாம்.

    திரைக்கதை

    திரைக்கதை

    அங்கு புதிதாக பொறுப்புக்கு வரும் ஆசிரியர், விஷயத்தை அறிந்து அவர்களை எப்படி நையப்புடைக்கிறார் என்பது திரைக்கதையாம். ஆனால், அந்த ஆங்கிலப்படத்துக்கு மூலம் கொரிய படம் என்கிறார்கள்.

    கொரியாவில்

    கொரியாவில்

    இந்த படத்தின் மூலம் கொரியாவில் பெரிய பிரச்னையே வெடித்ததாம். அந்தப் படத்தைதான் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி, தமிழுக்கு ஏற்ப மாற்றி எடுப்பதாகச் சொல்கிறது கோடம்பாக்கம்.

    English summary
    sources said that, the top hero movie story adopted from korean film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X