சேனலுக்கும், நடிகருக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்தா?
சென்னை: தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சீனியர் நடிகருக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை சீனியர் நடிகர் தொகுத்து வழங்கி வருகிறார்.
வழக்கம் போன்று நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறார் நடிகர்.

ஞாயிறு
நடிகர் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஸ்பான்சர் பெயரை சொல்லவே இல்லை. முந்தைய வாரம் சமத்தாக கூறினார்.

சந்தேகம்
நடிகர் கடந்த 2 நாட்களாக ஸ்பான்சர் பெயரை கூறாததால் எதுவும் பிரச்சனையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சீசனிலும் இதே பிரச்சனை எழுந்தது. நடிகர் அடம்பிடிக்க சேனல் ஒரு வழியாக கெஞ்சி அவர் மனதை மாற்றியது.

பார்க்கலாம்
அடுத்த வார இறுதி நாட்களில் நடிகர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர் பெயரை கூறுகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இல்லை அதற்குள் பிரச்சனை தீர்த்து வைக்கப்படலாம்.

அருமை
நடிகர் தனது புதிய படத்தின் ஒரு பாடலை டிவி நிகழ்ச்சியில் வெளியிட்டார். நடிகர் வந்தால் தான் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக உள்ளது என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










